வீட்டில் மகாலட்சுமி நிலைத்திருக்க வீட்டு தலைவிகள் பின்பற்ற வேண்டியவை

By Sakthi Raj May 01, 2024 08:00 AM GMT
Report

ஒருவரது வீட்டில் குடும்ப தலைவன் தலைவிகள் என்பவர்கள் மிக முக்கியமானவர்கள்.அவர்களை பொறுத்து அந்த வீட்டின் சூழ்நிலை அமைந்து இருக்கும்.

 சில வேலைகள் வீட்டு தலைவன் செய்ய வேண்டும் சில வேலைகளை வீட்டு தலைவிகள் செய்வதே உத்தமம். அப்படியாக ஒருவர் வீட்டில் மஹாலக்ஷ்மி நிறைந்து இருக்க அந்த வீட்டின் பெண்களுக்கு மிக பெரிய பங்கு இருக்கிறது.

ஒருவர் வீட்டில் மஹாலக்ஷ்மி நிறைந்து இருக்க அந்த வீடு தலைவிகள் என்ன செய்யவேண்டும் என்று பார்ப்போம்!

வீட்டில் மகாலட்சுமி நிலைத்திருக்க வீட்டு தலைவிகள் பின்பற்ற வேண்டியவை | Mahalakshmi Yogam Kudumbapenga Anmeegam Poojai

ஒருவருடைய வீடு பிரகாசமாக லட்சுமி கடாச்சமாக நிறைந்து இருக்க காலையிலும் மாலையிலும் விளக்கு ஏற்ற வேண்டும்.மேலும் விளக்கு ஏற்றிய உடன் வெளியில் செல்ல கூடாது.

அதே போல் விளக்கு ஏற்றியவுடன் அதை குளிர வைக்கவும் கூடாது. குறைந்து இருபது நிமிடங்கள் ஆவது விளக்கு எறியவேண்டும்.

மேலும் வீட்டில் ஒருவர் உறங்கிக்கொண்டு இருக்கும் வேளையில் விளக்கு ஏற்ற கூடாது.ஒருவர் விளக்கு ஏற்றும் வேளையில் தூங்கவும் கூடாது.

மேலும் விளக்கு ஏற்றி ஒரு மணி நேரம் ஆவது பெண்கள் முடி வாருவதை தவிர்க்க வேண்டும்.

காலை எழுந்து வாசல் கதவை திறக்கும் பொழுது மஹாலக்ஷ்மியை மனதில் நினைத்து மஹாலக்ஷ்மியே வருக என்றபடி திறக்கவேண்டும்.

வீட்டில் மகாலட்சுமி நிலைத்திருக்க வீட்டு தலைவிகள் பின்பற்ற வேண்டியவை | Mahalakshmi Yogam Kudumbapenga Anmeegam Poojai

தினமும் மறவாமல் வீட்டு வாசலில் கோலம் போடுவது வீட்டிற்கு அழகு மட்டும் அல்லாமல் நன்மை தரும்.

மேலும் இரவில் பால் தயிர் பிறரிடம் இருந்து கடன் வாங்குதல் கூடாது.

திருமணம் ஆன பெண்கள் நெற்றியில் எப்பொழுதும் போட்டும் குங்குமம் வைப்பது அவர்களுக்கு அழகை மட்டும் தருவது இன்றி வீடும் லட்சுமி கடாச்சம் நிறைந்து இருக்கும்.

குருபகவானை எப்படி நின்று வழிபடவேண்டும் தெரியுமா?

குருபகவானை எப்படி நின்று வழிபடவேண்டும் தெரியுமா?


நம் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால் குங்குமம் கொடுப்பது வழக்கம்.அப்படியாக ஒருவருக்கு குங்குமம் கொடுக்கும் முன் கொடுக்கும் குடும்ப தலைவிகள் முதலில் தான் நெற்றியில் இட்ட பிறகே குங்குமம் கொடுக்க வேண்டும்.

வெள்ளி செய்வாய்க்கிழமையில் கடன் கொடுப்பதும் வாங்குவதும் கூடாது. மேலும் இன்னாளில் அரசி வறுப்பது புடைப்பது போன்ற விஷயங்கள் அன்று தவிர்த்து விடவேண்டும்.

பெண்களுக்கு செவ்வாய் வெள்ளி கிழமை அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது அவசியம்.சனிக்கிழமையில் பெண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US