மாளவ்ய மகாபுருஷ யோகம்: வியாபாரத்தில் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் யார்?
2025 ஆம் ஆண்டு வருகின்ற ஜூன் 6 ஆம் தேதி புதன் பகவான் தனது சொந்த ராசியான மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த பெயர்ச்சி பத்ர ராஜயோகத்தை உருவாக்கும். அதே நேரத்தில் ஜூன் 29 முதல் ஜூலை 25 வரை சுக்கிரன் ரிஷபத்தில் மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்க உள்ளார்.
இந்த இரண்டு ராஜயோகங்களும் சேர்ந்து பல்வேறு சிறப்புகளை கொடுக்க உள்ளது. குறிப்பாக தொழில் செய்யபவர்களுக்கு இந்த யோகம் மிக சிறந்த மாற்றத்தை வழங்க உள்ளது. அப்படியாக, உருவாகும் இந்த யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் மிக பெரிய அதிர்ஷ்ட வாய்ப்புகளை பெற்று ஜாக்பாட் அடிக்கப்போகிறார்கள் என்று பார்ப்போம்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்கு உருவாகும் இந்த ராஜ யோகத்தால் தொழில் ரீதியாக இவர்கள் பல்வேறு முன்னேற்றங்களை சந்திக்க உள்ளார்கள். சமுதாயத்தில் இவர்களுக்கு மதிப்பு உயரும். மாணவர்கள் நினைத்த படிப்பை தேர்தெடுத்து படிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
மிதுனம்:
பத்ரா மற்றும் மாளவ்ய ராஜயோகம் ஜெமினிக்கு மிகவும் அதிர்ஷ்டமான சூழ்நிலையை உருவாக்க உள்ளது. திருமணத்திற்காக வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரன் அமையும். வேலையில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் உங்களுக்கான புகழ் உயர்ந்து நிற்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்கு இந்த யோகம் தொழிலில் நல்ல முன்னேற்றதை உருவாக்கி கொடுக்கும். அலுவலகத்தில் உங்களுக்கான பதவி உயர்வுகள் கிடைக்கும். திடீர் பணவரவு உங்கள் கடனை அடைக்க உதவியாக இருக்கும். ரியல் எஸ்டேட் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
கன்னி:
கன்னி ராசிக்கு இந்த யோகம் திருமண வாழ்வில் உள்ள சிக்கலை சரி செய்யும். கலை துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை மாற்றம் செய்ய விரும்புபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார ரீதியாக நல்ல மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் அடைவீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |