மாளவ்ய ராஜயோகம் 2025:ஜாக்பாட் அடிக்க போகும் 4 ராசிகள் யார்?

Report

பிப்ரவரி 2025 வருகின்ற வாரம் மாளவ்ய ராஜயோகம் உருவாக உள்ளது.இதனால் சில ராசிகளுக்கு பல விதமான அதிர்ஷடம் உருவாகும்.அப்படியாக பிப்ரவரி 10, 2025 திங்கள் கிழமை அன்று மீன ராசியில் மாளவ்ய ராஜயோகம் உருவாகிறது.இதன் விளைவாக குறிப்பிட்ட 4 ராசிகளுக்கு ஜாக்பாட் காத்திருக்கிறது.அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.

உங்கள் பக்கம் நியாயம் ஜெயிக்க வனவாராஹியை வழிபாடு செய்யுங்கள்

உங்கள் பக்கம் நியாயம் ஜெயிக்க வனவாராஹியை வழிபாடு செய்யுங்கள்

சிம்மம்:

நீண்ட நாட்களாக வெற்றிக்காக போராடும் சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாளவ்ய ராஜயோகம் ஒரு மிக பெரிய அதிர்ஷடத்தை தேடி கொடுக்க போகிறது.இந்த காலகட்டத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் பெரும் மகிழ்ச்சி உருவாகும்.வியாபாரம் செய்பவர்களுக்கு இது ஒரு பொற்காலம்.

மேஷம்:

பிப்ரவரி மாதத்தின் 2ஆவது வாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிக பெரிய திருப்பத்தை கொடுக்க போகிறது.எதிர்பாராத கஷ்டங்களில் இருந்து விடுபடுவீர்கள்.உங்களுக்கு ஏற்பட்ட பெரும் துயர் ஒன்று உங்களை விட்டு விலக போகிறது.வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் கூடும்.

ரிஷபம்:

மாளவ்ய ராஜயோகத்தின் செல்வாக்கின் காரணமாக வரும் வாரம் ரிஷப ராசியினர் மனதில் ஒருவகை மகிழ்ச்சி உண்டாகும்.சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உருவாகும்.வியாபாரம் விரிவடைவதை பற்றி தீர்க்கமாக சிந்திப்பீர்கள்.குழந்தை பாக்கியம் கிடைக்கும்.திருமண வரன் சிறப்பாக அமையும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்கள் பிப்ரவரியின் 2ஆவது வாரத்தில் இருந்து மன மகிழ்ச்சியுடன் நேரத்தை செலவு செய்வீர்கள்.சிலர் குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் யோகம் உருவாகும்.பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள்.சகோதரன் சகோதரி வழியில் நல்ல ஆதரவு கிடைக்கும்.வாழ்க்கையில் நல்ல திருப்பம் அமையும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

   

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US