திருப்பதியில் கருட வாகனத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி
திருப்பதியில் மலையப்ப சுவாமி கருட வாகன வீதியுலாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இந்தியாவின் மிகப் பெரிய கோயிலின் ஒன்றாகக் கருதப்படுவது திருப்பதி வெங்கடேஸ்வரா கோவில்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமி நாளில் மலையப்ப சுவாமியின் கருடன் வாகன புறப்பாடு நடைபெறுவது வழக்கம்.
அந்தவகையில் பவுர்ணமி நாளான நேற்று ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு கோயில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.
உற்சவர் மலையப்ப சுவாமி, கோயிலில் இருந்து எழுந்தருளிய வாகனம் மண்டபத்தை அடைந்து பின் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார்.
தொடர்ந்து நடத்தப்பட்ட தீப தூப நெய்வேத்தியங்களுக்கு பின் மாட வீதிகளில் பக்தர்களின் பக்தி கோசங்களுக்கு இடையே கருட வாகன புறப்பாடு நடைபெற்றது.
அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானின் கருட வாகன சேவையை கண்டு கற்பூர ஆரத்தி சமர்ப்பித்து வழிபட்டனர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |