திருவண்ணாமலையில் மங்கள விளக்கு பூஜை.., 1008 பெண்கள் பங்கேற்பு
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாக அருணாசலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயில் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும்.
பக்தர்கள் திருவண்ணாமலையில் உள்ள மலையையே சிவனாக வழிபடுகின்றனர்.
இந்த மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமி அன்றும் பல லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் வேத ஆகம தேவார ஆன்மிக கலாசார மாநாடு 2 நாட்கள் நடைபெற்றது.
இரண்டாவது நாளான இன்று காலை, உலக நன்மைக்காக மாநாட்டு அரங்கில் 1008 பெண்கள் பங்கேற்ற மங்கள விளக்கு பூஜை, சுமங்கலி பிரார்த்தனை நடைபெற்றது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







