மன்னிப்பே கிடையாத 6 பாவங்கள் எது தெரியுமா?
இந்த உலகத்தில் மனிதர்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் பாவம் புண்ணிய கணக்குகள் என்பது உண்மை. அதாவது மனிதன் செய்யும் நற்செயலுக்கும் தீய செயலுக்கும் அவர்கள் சந்திக்கும் எதிர்வினைகளே இந்த பாவபுண்ணியங்கள் ஆகும். அப்படியாக, உலகத்தில் மன்னிப்பே கிடையாத 6 பாவங்கள் இருக்கிறது. அவை என்னவென்று பார்ப்போம்.
1. ஒரு பொழுதும் பிறரின் மனைவி, கணவன் மீது ஆசையும் காதலும் கொள்ளக்கூடாது. அவ்வாறு மனதில் நினைத்தாலே அவர்களுக்கு மிக பெரிய பாவம் வந்து சேரும்.
2. நாம் பிறரின் சொத்துக்கள் மீதும் பணத்தின் மீதும் ஆசைப்பட்டு அதை அபகரிக்க முயற்சி செய்தல் கூடாது. இவை மிகப் பெரிய தீய விளைவுகளை கொடுத்து விடும்.
3. நம்முடைய சுயநலத்திற்காக பிறரின் கனவுகள், ஆசைகளை நாம் அழித்து அவர்கள் மீது தேவை இல்லாத பொய்கள், பழிகள் சுமத்தக் கூடாது.
4. நாம் தீய வழியில் செல்வதும், பிறருக்கு மனதால் கூட நன்மை நினைக்கமால் இருப்பதும், அவர்களுக்கு பெரிய பாவத்தை உண்டு செய்யும்.
5. எந்த சூழ்நிலையிலும் கர்ப்பிணிப் பெண்களிடம் மிக மோசமாக நடந்துக் கொள்ள கூடாது. அவர்களை எக்காரணத்திற்கும் தீய சொற்களால் திட்டக்கூடாது. அதே போல் மாதவிடாய் காலங்களில் பெண்களை மனம் நோகும்படி பேசுதல் கூடாது.
6. எந்த சூழ்நிலையிலும் நாம் தப்பித்துக் கொள்ள இன்னொருவர் மீது தேவை இல்லாத பொய், பழி சொல்லி அவர்களை சீர்குலையச் செய்யக்கூடாது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |