வாஸ்து: வீட்டில் மகிழ்ச்சி உண்டாக வைக்கவேண்டிய அதிர்ஷ்ட ஓவியங்கள்
வாஸ்து என்பது ஜோதிடத்தில் மிக முக்கியமானதாக பார்க்கக்கூடிய ஒரு விஷயம் ஆகும். அப்படியாக, வீடுகளில் மகிழ்ச்சி பெருக வாஸ்து ரீதியாக சில ஓவியங்கள் வைப்பதால் நம் வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருகுவதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் வீடுகளில் வாஸ்து ரீதியாக நாம் வைக்கவேண்டிய முக்கியமான ஓவியங்கள் பற்றிப்பார்ப்போம்.
இயற்கை ஓவியங்கள்:
நம் வீடுகளில் இயற்கை ஓவியங்கள் வைப்பதால் வீட்டில் அமைதியான சூழல் உருவாகிறது. அதனால், மலைகள், ஆறுகள், அல்லது காடுகள் போன்ற காட்சிகள் வைப்பதால் வீடுகளில் சமநிலை உணர்வும், நேர்மறை ஆற்றலையும் கொண்டு வருகிறது.
மலர்கள்:
வீடுகளில் மலர்கள் பூக்கள் கொண்ட ஓவியங்கள் வைக்கும் பொழுது வீடுகளில் புத்துணர்ச்சியும் அமைதியும் உண்டாகிறது. இந்த ஓவியங்களை நாம் படுக்கை அறையில் வைக்கும் பொழுது அவை நம் மனதிற்கு பாசிட்டிவ் எனர்ஜி கொடுக்கிறது.
தெய்வங்களுடைய படங்கள்:
நம் வீடுகளில் அழகான தெய்வங்களுடைய ஓவியத்தை வைக்கும் பொழுது அவை வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கிறது. அதோடு, அந்த ஓவியங்களை நாம் பார்க்கும் பொழுது நம் மனதில் நல்ல எண்ணங்கள் உருவாகிறது.
நீர்வீழ்ச்சிகள் ஓவியம்:
பொதுவாக தண்ணீர் எதிர்மறை ஆற்றலை விலக்கக் கூடிய அதீத சக்திகள் கொண்டது. அப்படியாக, வீடுகளில் ஏரிகள், நீர்வீழ்ச்சிகள் அல்லது ஆறுகள் போன்ற ஓவியங்களை வைக்கும் பொழுது செல்வமும் வளர்ச்சியும் உண்டாகிறது.
சூரிய உதயம்:
சூரியன் மிகுந்த நேர்மறை ஆற்றல் கொண்டது. அதனால், சூரியனின் படங்களை வீடுகளில் வைப்பதால் அவர்கள் மனதிற்கு உற்சாகமும், நம்பிக்கையும் பிறக்கிறது.
ஓடும் குதிரைகள்:
நம் வீடுகளில் ஓடும் குதிரைகளின் ஓவியத்தை வைக்கும் பொழுது அவை நம் வீட்டிற்கு வெற்றியை தேடிக்கொடுக்கிறது. அதனால் இந்த ஓவியத்தை வீடுகளில் வைக்கும் பொழுது நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |