உங்கள் ஜாதகத்தில் 12ஆம் இடத்தில் கேது உள்ளதா? அப்போ கட்டாயம் இது நடந்தே தீரும்
ஜோதிடத்தில் 12ஆம் இடம் என்பது மிகவும் முக்கியமான இடமாக பார்க்கப்படுகிறது. இருந்தாலும் பலரும் இந்த 12 ஆம் இடத்தை தவறாக புரிந்து கொண்டு இருக்கிறார்கள். அதாவது, 12 ஆம் இடம் என்பது இழப்புகள், தனிமை, முடிவு என்று பலரும் தவறாக எண்ணிக்கொள்கின்றனர்.
உண்மையில் இந்த 12 ஆம் இடம் மிக முக்கியமான இடமாகவும், இவை நம் முற்பிறவியின் தொடர்ச்சிகளை நமக்கு உணர்த்தும் இடமாகவும் கருதப்படுகிறது. இதைப் பற்றி நாம் சரியாக புரிந்துக் கொண்டால் நமக்கு இருக்கும் பயம் விலகி விடும்.
இந்த 12 ஆம் அமைப்பு என்பது ஒருவரின் கடந்த கால வாழ்க்கையில் அனுபவிக்காமல் விட்டு சென்ற விஷயங்களை அனுபவிக்கவும், கற்றுக்கொள்ள தவறிய பாடங்களை கற்றுக்கொள்ளவும் உணர்த்தும் இடம் ஆகும்.
உதாரணமாக, 12 ஆம் இடத்தில் சந்திரன் அமையப்பெற்று இருந்தால் முற்பிறவியில் சந்தித்த மன ரிதியான சில காயங்களை சரி செய்யவும், உணர்வு ரீதியாக சில விஷயங்களை நாம் கற்றுக் கொள்வதை உணர்த்துவது ஆகும்.
அதுவே 12 ஆம் இடத்தில் சுக்கிரன் அமையப்பெற்று இருந்தால், கடந்த காலத்தில் அனுபவிக்காத காதல் வாழ்க்கை, சுகபோகங்கள் அனுபவிக்க நாம் இந்த ஜென்மத்தில் பிறந்ததை குறிப்பதாகும். அதவாது, நாம் கடந்த காலத்தில் பாதியில் விட்டு சென்று அனுபவிக்காத விஷயங்களை அனுபவிக்க பிறந்து இருக்கின்றோம் என்பதை உணர்த்துவது ஆகும்.
அதிலும் குறிப்பாக 12 ஆம் இடத்தில் ஒருவருக்கு கேது அமையப்பெற்று இருந்தால், அந்த நபர் கட்டாயம் இந்த பிறவியில் மோட்சம் அடைவார் என்றும், அவருக்கு ஆன்மீகத்தில் அதிக நாட்டம் ஆர்வம் இருக்கும் என்பதை உணர்த்துவது ஆகும்.
இவர்கள் எப்பொழுதும் தியானம், தன்னை உணர்தல் என்ற தீவிர தேடுதலில் இருப்பார்கள். யாரிடமும் அவ்வளவு நெருக்கத்துடன் பழக்கமாட்டார்கள்.
ஆக, ஜோதிடத்தில் 12 ஆம் இடம் என்பது அவர்களின் முற்பிறவியின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது. அங்கு என்ன கிரகம் அமையப்பெற்று இருக்கிறதோ, அதை பற்றி முழுமையான பற்றும் புரிதலும் அவர்களுக்கு கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |