அட்சய திருதியை: தானம் அளிக்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்
அட்சய திருதியை என அறியப்படுவது இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும்.
அது தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும்.
முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திருதியை ஆகும்.
அந்தவகையில், சிறப்புமிக்க அட்சய திருதியை நன்னாள் இந்த வருடம் மே மாதம் 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது.
இந்த வருடம் வெள்ளிக்கிழமை அன்று அட்சய திருதியை வருவது பெரும் சிறப்பாகும்.
இந்நிலையில், அட்சய திருதியை அன்று புத்தாடை, உணவு போன்றவற்றை தானம் வழங்குவது இறைவனின் ஆசியை பெறலாம்.
அட்சய திருதியை நன்னாள் அன்று தானம் வழங்கும்பொழுது சொல்ல வேண்டிய மந்திரம் குறித்து பார்க்கலாம்.
அக்ஷய்ய திருதீயா புண்ய காலே அக்ஷய்ய புண்ய ஸம்பாதனார்த்தம் தர்மகடாக்ய உதகும்ப தானமஹம் கரிஷ்யே..
ஏஷ தர்மகடோ தத்தோ ப்ரும்ஹ விஷ்ணு சிவாத்மக: அஸ்ய பரதாநாத் ஸகலா: மம ஸந்து மனோரதா:
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |