27 நட்சத்திரங்களுக்கான மந்திரங்களும் அவர்களுக்கான அதிதேவதைகளும்

By Sakthi Raj Oct 16, 2026 08:54 AM GMT
Report

ஜோதிட ரீதியாக 12 ராசிகளும் 27 நட்சத்திரங்களும் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், 27 நட்சத்திரக்காரர்களுக்கு உரிய அதிதேவைகள் மற்றும் அவர்கள் பாராயணம் செய்யக்கூடிய மந்திரங்களை பார்ப்போம். அவர்கள் அந்த மந்திரத்தை தினமும் பாராயணம் செய்து வருகின்ற பொழுது நிச்சயம் நல்ல பலன்கள் கிடைக்கிறது.

27 நட்சத்திரங்களுக்கான மந்திரங்களும் அவர்களுக்கான அதிதேவதைகளும் | Mantras To Chant For 27 Nakshatras

உண்மையில் யார் துறவி? புத்தரின் வாழ்க்கை உணர்த்தும் ஆழமான பாடம்!

உண்மையில் யார் துறவி? புத்தரின் வாழ்க்கை உணர்த்தும் ஆழமான பாடம்!

1. அசுவினி:

இவர்களுக்குரிய அதிதேவதை அசுவினி குமாரர்கள்.

மந்திரம்:

"ஓம் அசுவினீ குமாரப்யாம் நம:"

2. பரணி:

இவர்களுக்குரிய அதிதேவதை: எமன் (யம தர்மராஜன்)

மந்திரம்:

"ஓம் யமாய நம:"

3. கிருத்திகை:

இவர்களுக்குரிய அதிதேவதை: அக்னி பகவான்

மந்திரம்:

"ஓம் அக்னயே நம:"

4. ரோகிணி:

இவர்களுக்குரிய அதிதேவதை: பிரம்மா / சந்திரன்

மந்திரம்:

"ஓம் ப்ரஹ்மணே நம:" அல்லது "ஓம் சந்திராய நம:"

5. மிருகசீரிடம்:

இவர்களுக்குரிய அதிதேவதை: சந்திரன்

மந்திரம்:

"ஓம் சோமாய நம:"

6. திருவாதிரை:

இவர்களுக்குரிய அதிதேவதை: ருத்திரன் (சிவபெருமான்)

மந்திரம்:

"ஓம் ருத்ராய நம:"

7. புனர்பூசம்:

இவர்களுக்குரிய அதிதேவதை: அதிதி / குரு பகவான்

மந்திரம்:

"ஓம் அத்யை நம:"

8. பூசம் :

இவர்களுக்குரிய அதிதேவதை: பிரகஸ்பதி (குரு பகவான்)

மந்திரம்:

"ஓம் பிரஹஸ்பதயே நம:"

9. ஆயில்யம்:

இவர்களுக்குரிய அதிதேவதை: சர்ப்பங்கள் (நாக தேவதைகள்)

மந்திரம்:

"ஓம் சர்பேப்யோ நம:"

10. மகம்:

இவர்களுக்குரிய அதிதேவதை: பித்ருக்கள் (முன்னோர்கள்) / சூரியன்

மந்திரம்:

"ஓம் பித்ருப்யோ நம:"

11. பூரம் :

இவர்களுக்குரிய அதிதேவதை: பகன் (அதிதி மைந்தன்)

மந்திரம்:

"ஓம் பகாய நம:"

12. உத்திரம் :

இவர்களுக்குரிய அதிதேவதை: அர்யமா

மந்திரம்:

"ஓம் அர்யம்ணே நம:"

உங்கள் ராசி படி நீங்கள் எந்த கர்மவினையில் பிறந்து இருக்கிறீர்கள் தெரியுமா?

உங்கள் ராசி படி நீங்கள் எந்த கர்மவினையில் பிறந்து இருக்கிறீர்கள் தெரியுமா?

13. ஹஸ்தம்:

இவர்களுக்குரிய அதிதேவதை: சூர்யன் / சவிதா

மந்திரம்:

"ஓம் சவித்ரே நம:"

14. சித்திரை:

இவர்களுக்குரிய அதிதேவதை: துஷ்டா / விஸ்வகர்மா

மந்திரம்:

"ஓம் த்வஷ்ட்ரே நம:"

15. சுவாதி:

இவர்களுக்குரிய அதிதேவதை: வாயு பகவான்

மந்திரம்:

"ஓம் வாதாய நம:" (அல்லது "ஓம் வாலவே நம:")

16. விசாகம்:

இவர்களுக்குரிய அதிதேவதை: இந்திரா மற்றும் அக்னி

மந்திரம்:

"ஓம் இந்த்ராக்கினிப்யாம் நம:"

27 நட்சத்திரங்களுக்கான மந்திரங்களும் அவர்களுக்கான அதிதேவதைகளும் | Mantras To Chant For 27 Nakshatras 

17. அனுஷம்:

இவர்களுக்குரிய அதிதேவதை: மித்திரன்

மந்திரம்:

"ஓம் மித்ராய நம:"

18. கேட்டை:

இவர்களுக்குரிய அதிதேவதை: இந்திரன்

மந்திரம்:

"ஓம் இந்திராய நம:"

19. மூலம் :

இவர்களுக்குரிய அதிதேவதை: நிருதி

மந்திரம்:

"ஓம் நிருதயே நம:"

20. பூராடம் :

இவர்களுக்குரிய அதிதேவதை: அப்பு (நீர் தேவதை)

மந்திரம்:

"ஓம் அத்ப்யோ நம:"

21. உத்திராடம் :

இவர்களுக்குரிய அதிதேவதை: விஸ்வ தேவதைகள்

மந்திரம்:

"ஓம் விஸ்வேப்யோ தேவேப்யோ நம:"

22. திருவோணம்:

இவர்களுக்குரிய அதிதேவதை: விஷ்ணு பகவான்

மந்திரம்:

"ஓம் விஷ்ணவே நம:"

23. அவிட்டம்:

இவர்களுக்குரிய அதிதேவதை: அஷ்ட வசுக்கள்

மந்திரம்:

"ஓம் வசுப்யோ நம:"

24. சதயம்:

இவர்களுக்குரிய அதிதேவதை: வருண பகவான்

மந்திரம்:

"ஓம் வருணாய நம:"

25. பூரட்டாதி:

இவர்களுக்குரிய அதிதேவதை: அஜ ஏகபாதன்

மந்திர:

"ஓம் அஜ ஏகபாதாய நம:"

26. உத்திரட்டாதி:

இவர்களுக்குரிய அதிதேவதை: அஹிர் புத்ன்யன்

மந்திரம்:

"ஓம் அஹிர் புத்ன்யாய நம:"

27. ரேவதி:

இவர்களுக்குரிய அதிதேவதை: பூஷா (சூரியனின் ஒரு வடிவம்)

மந்திரம்:

"ஓம் பூஷ் நம:".!..

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US