2026: டிசம்பர் 5 துலாம் ராசிக்கு ராகு கேது பெயர்ச்சி எப்படி இருக்க போகிறது?
ஜோதிடத்தில் சுக்கிர பகவானின் ஆதிக்கத்தை கொண்ட துலாம் ராசியினர் நீதி நேர்மையாக செயல்பட கூடியவர்கள். அப்படியாக, டிசம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ள ராகு கேது பெயர்ச்சி இவர்களுக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம்.
இதுவரை துலாம் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இந்த ராகு நான்காம் இடத்திற்கும், 11 இடத்திலிருந்து கேது பத்தாம் இடத்திற்கு பின்னோக்கி செல்கிறார்கள்.

கேது இடமாற்றம்:
கேது பகவான் இவர்களுக்கு பத்தாம் இடத்தில் அமர்ந்து நற்பலன்களை வாரி வழங்க இருக்கிறார். வீடுகளில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். தொழில் ரீதியாக நிறைய பலன்களை பெறுவீர்கள்.
பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். கடன் சுமைகள் படிப்படியாக குறைவதற்கான வாய்ப்பு உண்டு. புதிய வண்டி வாகனம் வாங்கக்கூடிய யோகம் கிடைக்கும்.
பிறரிடம் கொடுத்த பணம் வசூல் செய்வதற்கான அற்புதமான காலகட்டம். நீண்ட நாட்கள் கைகளுக்கு வராத ஓய்வூதிய பணங்கள் திடீரென கைகளுக்கு வந்து சேரும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழிலை விரிவாக்கம் செய்வீர்கள்.
ராகு மாற்றம்:
இவர்களுக்கு 5ஆம் இடத்தில் அமர்ந்த ராகு, நான்காம் இடத்திற்கு வருகிறார். நான்காம் இடம் என்பது மாதுர் ஸ்தானம் . இந்த இடம் சுகஸ்தானம் என்பதால் சோம்பல் அதிகமாக காணப்படலாம். எந்த ஒரு வேலையாக இருந்தாலும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடுவதை நிறுத்துவது அவசியம்.

தாயார் உடல் நிலையில் சற்று கவனம் வேண்டும். மருத்துவ செலவுகள் வரலாம். புதிய நபர்களிடம் பழகும் பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாரையும் இந்த காலகட்டங்களில் நம்பி விடாதீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். வேலையில் பணி அதிகரிக்கும்.
பரிகாரம்:
வெள்ளிக்கிழமைகளில் இவர்கள் மகாலட்சுமி வழிபாடு செய்து வர வர வேண்டும். அதேபோல், அமாவாசை திதியில் குலதெய்வ ஆலயத்திற்கு சென்று வருவதால் மனக்குழப்பங்கள் விலகி தெளிவும் புத்துணர்ச்சியும் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |