சந்திர கிரகணத்தால் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் அதிர்ஷ்டம் பெரும் ராசிகள்
2026 ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி பகுதி சந்திர கிரகணம் நிகழ்கிறது. இது இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் தெரியாது. ஆனால் இந்த கிரகணத்தின் பலன்கள் ஜோதிட சாஸ்திரப்படி 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
அதாவது கும்ப ராசியில் சதாபிஷ நட்சத்திரத்தில் சூரியன் மற்றும் ராகு இணைவதாலும் சிம்ம ராசியில் சந்திரன் மற்றும் கேது இணைவதாலும் இந்த கிரகணம் உருவாகின்றது. மேலும், இந்த சந்திர கிரகணத்தால் ஒருசில ராசியினருக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசியினருக்கு இந்த காலகட்டம் வியாபாரத்தில் நல்ல லாபம் பெறுவார்கள். வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். அலுவலகத்தில் உங்களுக்கு தொந்தரவு செய்த உயர் அதிகாரிகள் உங்களிடம் விலகிச் செல்வார்கள்.
வெளிநாடு செல்ல வேண்டும் என்று திட்டமிட்டு இருப்பவர்களுக்கு திட்டமிட்டபடி அவர்களுடைய வாழ்க்கை அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றமும் அங்கீகாரமும் பெறுவீர்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இந்த காலகட்டமானது இவர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்தை கொடுக்கப்போகிறது. திடீர் வருமானம் இவர்கள் பல கடன்களை அடைக்க கூடிய அமைப்பை உண்டாக்கும்.
ஒரு சிலருக்கு நினைத்த இடத்தில் வேலை கிடைக்கக்கூடிய யோகம் கிடைக்கும். எதிர்பார்த்தபடி சம்பள உயர்வு நீங்கள் கேட்காமல் உங்கள் அலுவலகத்தில் உங்களுக்கு கொடுப்பார்கள். தொழில் மற்றும் வணிகத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்துடன் நல்ல வாடிக்கையாளர்களையும் பெறுவீர்கள்.
மகரம்:
மகர ராசியினருக்கு இந்த காலகட்டமானது வருமானத்தை உயர்த்த எடுக்கும் எல்லாம் முயற்சிகளும் நிச்சயம் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுக்கும். அலுவலகத்தில் உங்களுடைய திறமைகள் வெளிப்படும். உங்களை சுற்றி உள்ளவர்கள் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள்.
கல்வி ரீதியாக புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பெறக்கூடிய பாக்கியம் உண்டாகும். உங்களுடைய நீண்ட நாள் ஆசைகளும் கனவுகளும் நிறைவேறக்கூடிய காலகட்டமாக இருக்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |