இன்றைய ராசி பலன்(18.12.2024)

Report

மேஷம்:

நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்கு சாதகம் இல்லாமல் போகலாம்.ஆதலால் மனதைரியதோடு முயற்சி செய்வது நல்லது.வெளியூர் பயணம் தள்ளி வைப்பது நன்மை தரும் நாள்.

ரிஷபம்:

வியாபாரத்தில் பல போராட்டங்களை சந்திக்கக்கூடும்.வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத சில நெருக்கடிகள் உருவாகும்.திட்டமிட்டு செய்வதால் செயல்களில் வெற்றி அடையலாம்.

மிதுனம்:

இன்று சுற்று சூழல் உங்களுக்கு சாதகம் இல்லாமல் போகலாம்.அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக சில செயல்கள் நடக்கும்.வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்.

கடகம்:

முயற்சியால் முன்னேற்றம் காண்பீர். செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது.இழுபறியாக இருந்த பணம் வரும்.

சிம்மம்:

தாய் தந்தையிடம் பேசும் பொழுது வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும்.அவர்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நன்மை தரும்.மதியம் மேல் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.

கன்னி:

நெருக்கடி நீங்கி நன்மை காண்பீர். வராமல் இருந்த பணம் வரும். பொருளாதார சங்கடம் தீரும். உங்கள் செல்வாக்கு உயரும்.உங்களை எதிர்த்து செயல்பட்டவர்கள் பலம் இழந்து காணப்படுவர்.

சாபம் பலிக்குமா?கர்ம வினைகள் சொல்வது என்ன?

சாபம் பலிக்குமா?கர்ம வினைகள் சொல்வது என்ன?

துலாம்:

இன்று தொழிலில் உங்கள் முழு கவனத்தை செலுத்த வேண்டும்.எதிர்காலத்தை பற்றி பல ஏற்பாடுகள் செய்வீர்கள்.நீண்ட நாள் எதிர்பார்த்த பொருளாதாரம் உங்களை தேடி வரும்.

விருச்சிகம் :

உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வதின் மூலம் விருப்பம் பலிக்கும். திறமையாக செயல்பட்டு எதிர்பார்த்த ஆதாயமடைவீர்.

தனுசு:

மனதில் உற்சாகம் பொங்கும் நாள்.வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.கணவன் மனைவி இடையே நல்ல அன்யோன்யம் இருக்கும்.சுற்றுலா செல்ல வாய்ப்புகள் உருவாகும்.

மகரம்:

உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும்.விமர்சனங்களை உங்கள் காதில் போட்டுக் கொள்ளாமல் செயல்படுவதால் நன்மை உண்டாகும்.

கும்பம்:

உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் விலகிச்செல்வர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். நீங்கள் ஈடுபடும் வேலையில் லாபம் உண்டாகும். வழக்கு வெற்றியாகும்.

மீனம்:

குலதெய்வத்தை வழிபாடு செய்வதால் நினைத்ததை சாதிப்பீர்கள்.பிள்ளைகள் வழியில் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும்.சொத்து விவகாரத்தில் உண்டான தொந்தரவுகள் விலகும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US