சாபம் பலிக்குமா?கர்ம வினைகள் சொல்வது என்ன?

By Sakthi Raj Dec 17, 2024 12:44 PM GMT
Report

மனிதனின் மனதை யாரும் கணிக்கமுடியாது.அவன் எந்த சூழலில் எவ்வாறு நடந்து கொள்வான் எப்படி மாறுவான் என்று காலமே முடிவு செய்கிறது.அப்படியாக சமயங்களில் அவன் "தான்"என்ற அகங்காரம் கொண்டு செய்வதறியாது சில மனிதர்களுக்கு தாங்கிக்கொள்ள முடியாத துன்பம் கொடுத்து விடுகின்றான்.

அதனால் மிகவும் மனம் உடைந்த அந்த நபர் இவ்வளவு துன்பம் கொடுக்கின்றானே என்று எண்ணி வேதனையில் அவனுக்கு சாபங்கள் கொடுத்து விடுவார்கள்.மேலும் இந்த சாபம் கொடுப்பதை நாம் புராணங்களிலும் பார்க்க முடியும்.

சாபம் பலிக்குமா?கர்ம வினைகள் சொல்வது என்ன? | Does Curse Works In Real Life

அப்படியாக இந்த சாபம் பலிக்குமா?சாபம் கொடுத்தவருக்கு என்ன நடக்கும்?சாபம் பெற்றவருக்கு என்ன நடக்கும் என்று பார்ப்போம். ஒருவர் தீராத வலியால் சாபம் கொடுத்தால் அது நிச்சயம் பலிக்கும்.ஆனால் அந்த சாபம் பலித்து ஒருவர் கஷ்டப்பட அந்த கர்ம வினைகளும் நம்மை வந்து சேரும்.

இதுவும் ஒரு வகையான பாவம் தான்.எதிரியை வீழ்த்த முடியமால் செய்வதறியாது நிற்கும் சூழல் நிச்சயம் நம் வாழ்க்கையில் சந்திக்க கூடும்.அந்த சமயத்தில் மனம் வருந்தும்.நமக்கு நேர்ந்த துன்பத்தை இழப்புகளை ஏற்று கொள்ள முடியாதுதான், இருந்தாலும் அவர்களின் அறியாமைக்கு நாம் சாபம் கொடுக்காமல் அந்த இடத்தை விட்டு விலகுவதே நன்மை தரும்.

வாழ்க்கையின் துன்ப சிறையில் இருந்து தப்பிப்பது எப்படி?

வாழ்க்கையின் துன்ப சிறையில் இருந்து தப்பிப்பது எப்படி?

அந்த நேரத்தில் துன்பம் அனுபவிக்கவேண்டியது நம்முடைய கர்மவினையாக இருக்கலாம்.ஆதலால் அதை ஏற்று கொண்டு ஒதுங்குவதே சிறந்தது.மனம் உடைந்து சாபம் கொடுக்க அது நிச்சயம் பலிக்கும்.

மேலும் அதற்கான பதில் வினையையும் நாம் அனுபவித்தாகவேண்டும்.அந்த பாவத்தை 16 மடங்கு அதிகமாக நம்முடைய தலைமுறை சுமக்க நேரிடும்.இங்கு எல்லாம் பகவான் கணக்கில் இருக்கிறது.அதில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது.ஆக அமைதியாக இருந்தால் காலம் சொல்லும் பதில் நமக்கு சாதகமாக அமையும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US