நினைத்தது நடக்க மார்கழி முதல் நாள் செய்யவேண்டியவை
மார்கழி மாதம் சக்தி நிறைந்த மாதம்.வழிபாட்டிற்கு மார்கழி மாதம் போல் சிறந்த மாதம் இல்லை.ஆதலால் தான் கிருஷ்ணர் மாதங்களில் நான் மார்கழி என்கிறார்.மேலும் இந்த சிறப்பு வாய்ந்த மாதங்களில் தான் ஆண்டாள் பெருமாளை நினைத்து பாவை நோன்பு மேற்கொண்டு பெருமாளை அடைந்தார்.
ஆண்டவனைத் தொழுவதற்கென்றே உருவான மாதம் இது இது என்பதால் இந்த மாதத்தில் மங்கள காரியங்கள் எதுவும் நிகழ்த்தப்படுவதில்லை.அப்படியான சிறப்பு மிகுந்த மார்கழி மாதம் முதல் நாள் சகல நன்மைகளும் நினைத்தது நடக்கவும் நம் வீட்டில் செய்யவேண்டிய வழிபாட்டை பற்றி பார்ப்போம்.
மார்கழி மாதம் முதல் நாள் இந்த வருடம் திங்கள் கிழமை பிறக்கிறது.இந்த மாதத்தில் அதிகாலை எழுந்து குளித்து வழிபாடு செய்வது மிக சிறந்த பலனை கொடுக்கும்.இந்த பரிகாரத்தை செய்ய மார்கழியில் வரும் எதாவது ஒரு நாளை எடுத்து கொள்ள வேண்டும்.
மனிதனுக்கு குளியல் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.ஜலத்திற்கு தீய சக்திகளை போக்கும் குணம் உண்டு.நாம் தினமும் குளிப்பதால் மனமும் உடலும் சுத்தமாகும்.அப்படியாக மார்கழி மாதத்தில் குளிக்கும் பொழுது சுத்தமான பசும் பால் வாங்கிக்கொள்ள வேண்டும்.
காய்ச்சாத பசும்பால் என்றால் மிகவும் நன்று.காய்ச்சிய பசும்பால் தான் இருக்கிறது என்றால் அதையும் பரிகாரத்திற்கு பயன்படுத்தலாம்.அதை குளிக்கும் தண்ணீரில் இரண்டு சொட்டு விட்டு குளிக்க வேண்டும்.
குளிக்கும்போது கோவிந்தா ! கோவிந்தா ! நாராயணா நாராயணா ! என்ற நாமத்தை சொல்லி குளித்தால் உங்களை பிடித்த பீடை முற்றிலும் விலகும்.இதை தொடர்ந்து 30 நாள் செய்ய முடியும் என்றாலும் செய்யலாம்.
இவ்வாறு செய்யும் பொழுது நமக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பம் விலகி மகிழ்ச்சி உண்டாகும்.ஆனால் இந்த குளியலை மார்கழி மாதம் சூரிய உதயத்திற்கு முன்பாக மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |