திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது இந்த விஷயங்களை பார்க்க தவறாதீர்கள்
திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது நான் நிறைய விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது ஒருவருக்கு திருமணம் முடிந்த பிறகு அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும்?
சண்டை வருமா? குழந்தை பாக்கியம் நன்றாக இருக்குமா? விட்டுக் கொடுக்கும் தன்மை இருக்குமா? பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் என்பதை பற்றி நாம் கவனிக்க வேண்டும்.
அந்த வகையில், திருமணத்திற்காக நாம் பொருத்தம் பார்க்கின்ற பொழுது எந்த விஷயங்களில் அதிக அளவில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம். திருமண பொருத்தம் என்று எடுத்துக் கொள்கின்ற பொழுது ரஜ்ஜு பொருத்தம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இதனை நாம் தவிர்க்கவே கூடாது.
அதேபோல், ஒருவருடைய திருமண வாழ்க்கையில் இந்த ராகு மற்றும் கேதுவின் தாக்கம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ராகுவும் கேதுவும் ஒருவருக்கு திருமணத்தை தடுப்பதில்லை. ஆனால், திருமணத்திற்கு பிறகு வாழ்க்கையை மாற்றி அமைக்கிறது.
அதாவது, 7ல் ராகு கணவன் மனைவி இடையே பிரிவு உண்டாக்கலாம். கேது இருந்தால் ஒரு விரக்தி நிலையை கொடுக்கலாம். ஜாதகத்தில் நான்காம் இடம் என்பது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இதுதான் குடும்ப ஒற்றுமை அடக்கம் ஆகியவற்றை குறிக்கக்கூடியது. அதனால் இந்த நான்காம் இடம் எப்பொழுதும் கெட்டுப் போயிருக்கக் கூடாது. மேலும், ஏழாம் இடமும் மற்றும் சுக்கிரனும் வலுவாக இருக்க வேண்டும். இதுதான் ஒரு திருமண வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானதாக இருக்கிறது.
அதை போல், எட்டாம் இடம் என்பது ஒரு ஆணினுடைய ஜாதகத்தை எடுத்துக் கொள்கின்ற பொழுது சொத்து மற்றும் ஆயுளை குறிக்கக் கூடியதாகவும் பெண்ணுடைய ஜாதகம் எடுக்கும் பொழுது அந்தப் பெண்ணினுடைய மாங்கல்ய பலத்தை குறிக்கக்கூடியதாகவும் இருக்கிறது.
இவர் திருமணத்தின் பொழுது நாம் நிறைய பொருத்தங்களை பார்ப்பது அவசியம். மேலும், என்னென்ன பொருத்தங்களை பார்க்க வேண்டும் என்பதை பற்றி இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |