திருமணத்திற்கு இப்படி பொருத்தம் பார்த்தால் பிரிவே வராதாம்
ஜோதிட ரீதியாக திருமண பொருத்தம் என்பது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஒரு ஆண் பெண் இருவரும் ஒன்றாக வாழ்க்கையில் இணைந்து நெடுங்காலமாக வாழ்வதற்கு அடிப்படையான தேவை புரிதலாக இருந்தாலும் இருவருடைய கிரக அமைப்புகளை சற்று ஆராய்ந்து பார்க்கின்ற பொழுது அவர்களுக்கு இருக்கக்கூடிய சில நன்மை தீமைகளுக்கு ஏற்ப நாம் வரன் தேர்ந்தெடுப்பதற்கு உதவியாக இருக்கும்.
அந்த வகையில், திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது மணமகன் மற்றும் மணமகளின் பிறந்த தேதிகளை கொண்டு எண் கணித அடிப்படையில் பொருத்தம் பார்ப்பது அவசியம்.
மேலும், திருமணம் நடைபெறும் தேதி, தம்பதியினர் உடைய எண்களின் ஒத்துப்போவது மிகவும் அவசியமாக இருக்கிறது. திருமண தேதியில் சில குறைபாடுகள் இருந்தாலும் சாந்தி முகூர்த்த தேதியை சரியாக தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியமாக இருக்கிறது.
இதனால் இல்லற வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சிக்கல்களை முழுமையாக தவிர்க்கலாம். ஒருவேளை சரியான பொருத்தம் இல்லாத தேதியில் திருமணம் நடைபெற்று விட்டால் அது சில நேரங்களில் பிரிவினை அல்லது குடும்பத்தில் சில சிக்கல்களை உண்டாக்க செய்யும்.
மேலும், திருமணம் பொருத்தம் பார்க்கின்ற பொழுது எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |