18 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் செவ்வாய் சுக்கிரன் இணைவு.. யாருக்கு கொண்டாட்டம்?
ஜோதிடத்தில் கிரகங்களுடைய மாற்றமானது ஒவ்வொரு ராசியினருக்கும் பல்வேறு தாக்கத்தை உண்டு செய்யும். அந்த வகையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அற்புதமான சேர்க்கை நடக்க உள்ளது.
இது குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்க போகிறது. அதாவது கிரகங்களில் ஒருவருக்கு வீரம், வலிமை, கோபம் ஆகியவற்றுக்கு காரணியாக இருக்கக்கூடிய செவ்வாய் பகவான் அழகு, இன்பம் ஆடம்பரம், செல்வம் ஆகிவற்றை கொடுக்கக் கூடிய சுக்கிர பகவான் உடன் கும்ப ராசியில் இணைய உள்ளார்கள்.
அப்படியாக, பிப்ரவரி மாதத்தில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அற்புதமான சேர்க்கை நடப்பதால் யாருக்கு யோகம் என்று பார்ப்போம்.

மகரம்:
மகர ராசியினருக்கு சுக்கிரன் மற்றும் செவ்வாய் இணைவால் இவர்களுக்கு எதிர்ப்பாராத இடங்களில் இருந்து பண உதவிகள் கிடைக்கும். அது மட்டும் அல்லாமல் நீண்ட நாட்களாக நீங்கள் காத்திருந்து வாங்க வேண்டும் என்ற நினைத்த விஷயம் இந்த காலகட்டங்களில் உங்கள் கைகளுக்கு வந்து சேரும். வழக்கு விஷயங்களில் நிலுவையில் இருந்தால் உங்களுக்கு சாதகமாக முடியும்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு செவ்வாய் சுக்கிரன் சேர்க்கையானது தொட்டுதெல்லாம் பொன்னாகக் கூடிய அற்புதமான காலகட்டமாகும். இவர்களுக்கு இந்த சேர்க்கை அதிர்ஷ்டம் நிறைந்த சேர்கையாகவும், வேலை செய்யும் இடங்களில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு குடும்பங்களுடன் ஒற்றுமை போன்ற அற்புதமான சூழல் உருவாகும். காதல் வாழ்க்கையில் இனிமை உண்டாகும். சமுதாயத்தில் உங்களுக்கு மரியாதையும் செல்வாக்கும் கிடைக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு செவ்வாய் சுக்கிரன் சேர்க்கையானது இவர்களுக்கு அளவற்ற செல்வத்தை இந்த காலகட்டங்களில் கொடுக்கப் போகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். நீண்ட நாட்களாக மருத்துவ ரீதியாக நீங்கள் ஆலோசனை பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் அதிலிருந்து விடுபடக்கூடிய காலமாகும். குழந்தை பாக்கியம் பெற வேண்டும் என்று காத்திருப்பவர்களுக்கு நிச்சயம் அதற்கான வாய்ப்புகள் வரும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |