நாளைய ராசி பலன்(30-01-2026)

Report

மேஷம்:

இன்று உடன்பிறந்தவர்கள் உங்களை புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்ளலாம். வேலைப்பளு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். உணவு விஷயங்களில் மிகுந்த கவனம் வேண்டும்.

ரிஷபம்:

காலையிலிருந்து உடல் சோர்வாக காணப்படும். நண்பர்களிடம் எதிர்பாராத கருத்து வேறுபாடுகள் வரலாம். வழக்கு விஷயங்களில் நீங்கள் சந்தித்த இழுபறிகள் முடிவுக்கு வரும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

மிதுனம்:

குடும்பத்தில் வீண் வாக்குவாதமும் மனக்கசப்புகளும் உண்டாகும். புதிய முதலீடுகள் செய்வது பற்றி யோசிப்பீர்கள். ஆலய வழிபாடுகளில் பங்கு கொள்வீர்கள். நிலம் தொடர்பான விஷயங்கள் முடிவிற்கு வரும்.

கண் திருஷ்டி, ராகு- கேது தோஷம் போக்கும் சக்தி வாய்ந்த கல் உப்பு பரிகாரம்

கண் திருஷ்டி, ராகு- கேது தோஷம் போக்கும் சக்தி வாய்ந்த கல் உப்பு பரிகாரம்

கடகம்:

மனரீதியாக சந்தித்து வந்த கவலைகள் விலகும். வாழ்க்கை துணை உங்களுக்கு ஆறுதலாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாடு செல்லும் உண்டாகும்.

சிம்மம்:

சொத்து விவகாரங்களில் இருந்து வந்த பிரச்சனை ஒரு நல்ல முடிவுக்கு வரும். சுயநலமாக செயல்பட வேண்டிய நாள். வாழ்க்கை துணையுடன் ஏற்பட்ட மோதல்கள் விலகும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

கன்னி:

நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டும் என்று நினைத்த நண்பர்களை இன்று சந்திப்பீர்கள். சொந்தங்கள் மத்தியில் தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய நாள். அலுவலகத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும்.

துலாம்:

காலை முதல் மனம் சற்று பதட்டமாகவே காணப்படும். புதிய நட்புகளின் அறிமுகம் பெறுவீர்கள். அரசு வழியில் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். அரசு வழியில் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும்.

விருச்சிகம்:

மருத்துவ ரீதியாக ஒரு சில பிரச்சினைகளை சந்திக்கலாம். அத்தை வழி உறவுகளால் சந்தித்து வந்த மன வருத்தம் விலகும். நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள்.

தனுசு:

துணிந்து எதையும் செய்யக்கூடிய நாள். ஒரு சிலருக்கு வீடுகளில் தங்கும் வாங்கக் கூடிய யோகம் கிடைக்கும். வெளிநாடு செல்ல வேண்டும் என்று திட்டமிட்டு இருப்பவர்களுக்கு ஒரு சில தடைகள் வரலாம்.

நண்பர்களுக்காக எதையும் செய்யத் துணியும் 3 ராசியினர்.. யார் தெரியுமா?

நண்பர்களுக்காக எதையும் செய்யத் துணியும் 3 ராசியினர்.. யார் தெரியுமா?

மகரம்:

தந்தையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். திருமண வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரன் அமையும்.

கும்பம்:

ஆசிரியர் தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். சொந்த ஊர்களில் உங்களுக்கு எதிரியாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். வழக்கு தொடர்பான விஷயங்கள் முடிவுக்கு வரும்.

மீனம்:

புதிய தொழில் அல்லது வியாபாரம் தொடங்குவதை பற்றி யோசிப்பீர்கள். உங்களுக்கு உறுதுணையாக இருந்தவர்களிடம் சில கருத்து வேறுபாடுகள் வரலாம். மாலை மேல் மனதில் தெளிவு பிறக்கும். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US