2025 மே மாதத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விரதங்களும் விசேஷங்களும்
வருடத்தில் வரக்கூடிய 12 மாதமும் பல ஆன்மீக சிறப்புகளும் விசேஷங்களும் நிறைந்த மாதம் ஆகும். அப்படியாக, நாம் ஒவ்வொரு நாட்களையும் வாரங்களையும் நமக்கான புதிய வாய்ப்புகளாக பார்க்கவேண்டும். கண்டிப்பாக மனிதனுக்கு மரணம் நிகழும் என்றாலும் அது எப்பொழுது நம்மை நெருங்கும் என்று தெரியாது.
ஆதலால் நாம் ஒவ்வொரு நாளையும் துன்பம் என்று துவண்டு போகாமல், இந்த நாளும், இந்த நிமிடமும் நமக்கான ஒரு வாய்ப்பு என்று எடுத்துக்கொண்டு வாழ்க்கை வளர்ச்சிக்கும், ஆன்மீக பாதையிலும் நம் மனதை செலுத்த வேண்டும். அப்படியாக, 2025 மே மாதத்தில் நாம் கடைப்பிடித்து வழிபாடு செய்யவேண்டியா முக்கியமான விரத நாட்களும் விசேஷ தினங்கள் பற்றியும் பார்ப்போம்.
1 மே வியாழக்கிழமை உழைப்பாளர் தினம், சதுர்த்தி விரதம்
2 மே வெள்ளிக்கிழமை சஷ்டி
3 மே சனிக்கிழமை கங்கா சப்தமி
5 மே திங்கட்கிழமை துர்காஷ்டமி
6 மே செவ்வாய்க்கிழமை சீதா நவமி
7 மே புதன்கிழமை ரவீந்திரநாத் தாகூர் ஜெயந்தி
8 மே வியாழக்கிழமை மோஹினி ஏகாதசி
9 மே வெள்ளிக்கிழமை பிரதோஷ விரதம்
11 மே ஞாயிறு நரசிம்ம ஜெயந்தி, அன்னையர் தினம்
12 மே திங்கள் சித்ரா பூர்ணிமா, புத்த பூர்ணிமா
13 மே செவ்வாய் நாரத ஜெயந்தி
15 மே வியாழன் ரிஷப சங்கராந்தி
16 மே வெள்ளி சங்கடஹர சதுர்த்தி
20 மே செவ்வாய் காளாஷ்டமி
23 மே வெள்ளி ஏகாதசி
24 மே சனிக்கிழமை பிரதோஷ விரதம்
25 மே ஞாயிறு மாசிக் சிவராத்திரி
26 மே திங்கட்கிழமை சாவித்திரி விரதம்
27 மே செவ்வாய் அமாவாசை
28 மே புதன்கிழமை சந்திர தரிசனம்
29 மே வியாழன் மஹாரன பிரதாப் ஜெயந்தி
30 மே வெள்ளி சதுர்த்தி விரதம்
31 மே சனி சீதல் சதி
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |