தனக்கு மட்டுமே துன்பம் என்று வருந்துபவர்களா? ஜோதிடம் சொல்வதை தெரிந்து கொள்ளுங்கள்
இந்து மதத்தில் நாம் ஜோதிடத்திற்கு அதிக அளவிலான முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம். அப்படியாக ஜோதிடம் ஒரு மிக சிறந்த கலை. அவை நமக்கு வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்களை 12 கட்டங்கள் வழியாகவும், 9 கிரகங்கள் வழியாகவும் உணர்த்துகிறது. ஜோதிடம் புரிந்து கொண்டால் எதிர்காலத்தை கணிப்பதை தாண்டி, நமக்கு வாழ்க்கையை பற்றி ஒரு புரிதல் உண்டாகும்.
எதையும் ஏற்று கொள்ளும் பக்குவம் கிடைக்கும். இந்த உலகத்தில் பலரும் துன்பம் என்னும் கடலில் மூழ்கியே வாழ்க்கை என்னும் பொக்கிஷத்தை புரிந்து கொள்கிறார்கள். அப்படியாக, ஜோதிடத்தில் 9 கிரகங்களும் அவற்றின் சுழற்சி வைத்து தான் வாழ்க்கையில் மாறுதல்களும் மாற்றங்களும் நிகழ்கிறது.
அந்த வகையில் பலரும் தனக்கு மட்டும் துன்பம் என்று வருந்துபவராக இருப்பார்கள். அவர்கள் ஜோதிடம் ரீதியாக சில விஷயங்களை புரிந்து கொண்டால் அவர்கள் துன்ப சிறையில் இருந்து விடுதலை பெறலாம். மனிதனாக பிறந்து எத்தனை நல்லவனாகவும், வல்லவனாகவும் இருந்தாலும், ஒரு நாள் துன்பத்தையும், அவனின் மரணத்தையும் தழுவியே ஆக வேண்டும்.
அதாவது 9 கிரகங்களும் மாற்றம் பெற்று அவனுக்கு பாதகமாக அமைந்து விட்டால் கட்டாயம் அவன் நிலை தடுமாறி போவான். செய்வதறியாது பல சிக்கல்களில் மாட்டி கொள்வான். ஏன், நல்லவர்களையே அவன் பகைத்து கொள்ளும் நிலை வரலாம்.
எப்பொழுதும் நேர்மறையாகவும் சிறந்த அறிவோடும் சிந்தித்து கொண்டு இருந்தவர் மொத்தமாக எதிர்மறை சிந்தனைக்குள் சென்று விடக்கூடும். உண்மை என்று நம்பியவையில் இருந்து விலகி விடுவார்கள். மாயை என்று நம்பியதை ஏற்று கொள்ள தொடங்கிவிடுவார்கள்.
உலகமே உங்களுக்கு எதிராக திரும்பி நிற்பதை பார்க்கக்கூடும். இதற்கெல்லாம் கிரக சூழ்நிலைகளும் ஒரு காரணம். அதாவது, உங்களை துன்பத்தில் தள்ள வேண்டும் என்றால் முதலில் உங்கள் கண்களை கட்டி மதி மங்க செய்து கிரகங்கள் அதனுடைய கர்ம பலன்களை நிறைவேற்றி கொள்ளும். இதற்காக நாம் வருத்தம் கொள்ள தேவை இல்லை.
கிரகம் மாறும் பொழுது மனநிலையும் மாறுதல் அடையும். நீங்க அடைந்த துன்பத்தில் இருந்தும், விடுதலை கிடைக்கும். ஆனால், அவ்வளவு நெருக்கடியான சூழ்நிலையிலும் எவர் ஒருவர் இறைவனை விடாது பற்றி கொண்டு, பிரார்த்தனை செய்கின்றானோ அவன் துன்பம் என்னும் விடுதலை பெரும் பொழுது மிக சிறந்த மனிதராக உயர்ந்து நிற்க கிரகம் வழிவகுக்கும்.
மேலும், 9 கிரகங்களும் மனிதர்களுக்கு தேவையான பாடங்களை கற்று கொடுக்கவும், அவர்கள் வாழ்க்கையை வாழ்வதற்கும் மட்டுமே சுழன்று கொண்டு இருக்கிறது. ஆக, நடப்பவை சில விஷயங்கள் நம் கைகளில் இருந்தாலும், அதை ஆட்டிவைக்கும் இறைவனின் கைகளில் தான் முடிவு இருக்கிறது.
ஆக, நடப்பவை நடந்தே தீரும். அதை எந்த ஒரு மாய மந்திரங்கள் கொண்டும் தடுக்க முடியாது. அவ்வாறு தடுத்து விட்டோம் என்று மார்தட்டி கொண்டாலும், அதற்கு சமமாக வேறு வழியில் அந்த பிரச்சனைகளை சந்தித்தே ஆக வேண்டும். துன்பம் வெறும் சில காலங்கள் மட்டுமே. அதை இதுவும் கடந்து போகும் என்று கடந்துவிடுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |