இன்றைய ராசி பலன்(03-05-2025)

Report

 மேஷம்:

மேஷ ராசி நேயர்களுக்கு இன்றைய தினம் மனதில் மகிழ்ச்சியையும் அமைதியையும் கொடுக்கும் தினம் ஆகும். சிலருக்கு வாங்கிய கடன்களை அடைக்கும் வழிகள் பிறக்கும். எதிர்காலம் பற்றிய பயம் விலகும்.

ரிஷபம்:

ரிஷப ராசி நேயர்களுக்கு இன்றைய தினம் திருமண வாழ்க்கையை பற்றிய புரிதலை உண்டு செய்யும். தாய் தந்தை உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள். மனதிற்கு பிடித்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

மிதுனம்:

மிதுன ராசி நேயர்களுக்கு இன்றைய தினம் எதையும் யோசித்து முடிவு எடுக்க வேண்டிய தினம் ஆகும். தொழில் செய்யும் இடத்தில் உங்களுக்கான மரியாதை அதிகரிக்கும். தடைப்பட்ட காரியம் எளிதாக முடிவடையும்.

கடகம்:

கடக ராசி நேயர்களுக்கு இன்றைய தினம் பொழுது போக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகம் ஆகும். இன்று மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். பொருளாதார ரீதியாக நல்ல மாற்றம் அடைவீர்கள்.

சிம்மம்:

சிம்ம ராசி நேயர்களுக்கு இன்றைய தினம் வியாபாரத்தை மாற்றம் செய்வது குறித்து யோசிப்பீர். மதியத்திற்குமேல் திடீர் செலவுகள் தோன்றும். உங்கள் நீண்ட நாள் எண்ணம் பூர்த்தியாகும். ஆதாயம் அதிகரிக்கும்.

கன்னி:

கன்னி ராசி நேயர்களுக்கு இன்றைய தினம் நண்பர்கள் உதவியால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக பேச வேண்டும். சகதோர வழி உறவால் ஆதாயம் கிடைக்கும்.

துலாம்:

துலாம் ராசி நேயர்களுக்கு இன்றைய தினம் வியாபாரத்தில் தொல்லைகள் கொடுத்தவர்கள் விலகி செல்வார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். உறவினர் வழியாக நற்செய்தி வந்து சேரும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்றைய தினம் மனதில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் இன்று நடந்தேறும். எதிர்ப்புகள் விலகும். பெரிய மனிதர் ஆதரவால் உங்கள் வேலைகள் நடந்தேறும்.

தனுசு:

தனுசு ராசி நேயர்களுக்கு இன்றைய தினம் எடுக்கும் முயற்சியில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் இருக்கும். கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உண்டாகும். பிறரிடம் தேவை இல்லாத வாக்கு வாதம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

மகரம்:

மகர ராசி நேயர்களுக்கு இன்றைய தினம் உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். தடைபட்டிருந்த வேலைகள் நடந்தேறும். வழக்கு வெற்றியாகும். தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். எதிரிகள் விலகிச் செல்வர்.

கும்பம்:

கும்ப ராசி நேயர்களுக்கு இன்றைய தினம் இழுபறியாக இருந்த வேலைகளை இன்று முடிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி விலகும். புதிய முயற்சி ஆதாயம் தரும்.

மீனம்:

மீன ராசி நேயர்களுக்கு இன்றைய தினம் வாழ்க்கையை பற்றிய நல்ல புரிதலை கொடுக்கும். சகோதரி வழி உறவால் நல்ல பிணைப்பு உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.   

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US