இன்றைய ராசி பலன்(08-05-2025)
மேஷம்:
இன்று உங்கள் உடல் நிலையில் அக்கறை செலுத்த வேண்டும். உங்களை பற்றிய முக்கியமான விஷயங்களை பிறரிடம் பகிர வேண்டாம். அலுவலகத்தில் ஏற்ப்பட்ட சிக்கல் விலகி செல்லும்.
ரிஷபம்:
தாய் வழி உறவால் சில சிக்கல் உண்டாகும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மதியம் மேல் நீங்கள் எதிர்பார்த்த செய்தி உங்களை வந்து சேரும்.
மிதுனம்:
ஒரு சிலருக்கு வேலையில் சில சிக்கல்கள் உண்டாகும். மூன்றாம் நபரின் பேச்சை கேட்டு முக்கிய முடிவுகளை எடுக்காதீர்கள். மனதில் நீண்ட நாட்களாக இருந்த கவலை விலகும். நன்மை உண்டாகும் நாள்.
கடகம்:
வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். அரசுவழி முயற்சிகள் சாதகமாகும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.
சிம்மம்:
வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல் விலகும். பொருளாதார நிலையில் நல்ல மாற்றம் பெறுவீர்கள். உடல் உபாதைகள் சரி ஆகும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும்.
கன்னி:
நண்பர்கள் வழியாக உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். மனதில் உள்ள விருப்பம் நிறைவேறும். அவசர செலவுகளால் சில சிக்கல் உண்டானாலும், துணிச்சலாக சமாளிப்பீர்கள்.
துலாம்:
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சியில் தடையும் தாமதமும் உண்டாகலாம். தேவை இல்லாத அலைச்சல் உண்டாகும். வேலை பளு அதிகரிக்கும். இன்று முடிந்த அளவு வேலையில் கவனமாக இருப்பது நன்மை தரும்.
விருச்சிகம்:
உங்கள் முயற்சி நிறைவேறி ஆதாயத்தை உண்டாக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தொழிலில் இருந்த பிரச்னைகள் விலகும். எதிர்பார்த்த வரவு வந்து நெருக்கடியை நீக்கும்.
தனுசு:
இன்று சேமிப்பில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய கவலை மேலோங்கும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்ல நல்ல வாய்ப்புகள் தேடி வரும். நன்மையான நாள்.
மகரம்:
தடைபட்டிருந்த வேலைகள் நடந்தேறும். வரவேண்டிய பணம் வரும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடி நீங்கும்.
கும்பம்:
மனதில் குழப்பம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நன்மையாகும். பணியிடத்தில் நெருக்கடி அதிகரிக்கும். சிலர் புதிய பிரச்னையை சந்திக்க நேரும். வேலைகளில் எதிர்பாராத நெருக்கடிகள் தோன்றும்.
மீனம்:
நண்பர்களின் ஆதரவால் சில முக்கியமான விஷயங்களை செய்து முடிப்பீர்கள். ஒரு சிலருக்கு பொருளாதாரத்தில் ஏற்பட்ட சிக்கல் விலகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |