இறந்தவர்கள் கனவில் வந்தால் நல்லதா?கெட்டதா?
பொதுவாக கனவு என்பது ஆழ்மனதின் வெளிப்பாடாக இருந்தாலும் ஒவ்வொரு கனவுகளுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு.அந்த வகையில் வீட்டில் நெருங்கிய நபர் அல்லது நண்பர்கள் இறந்து போனால் அவர்கள் கனவில் வரலாமா?அப்படி வந்தால் நன்மையா?தீமையா?என்று பார்ப்போம்.
பொதுவாக இறந்தவர்கள் நம் கனவில் வரமாட்டார்கள்.அதையும் மீறி அவர்கள் வருகிறார்கள் என்றால் அவர்கள் எதோ நமக்கு அறிகுறி காட்டுவதற்காக இருக்கலாம்.இன்னும் சிலர் அவர்களின் நெருங்கிய உறவாகவே இருந்தாலும் இறந்து கனவில் வரும் பொழுது பயந்து விடுவார்கள்.
அந்த வகையில் இறந்த தாய் கனவில் வரும் பொழுது உங்க வீட்டில் பெண் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளது.இறந்த தந்தை கனவில் வரும் பொழுது உங்கள் வீட்டில் உண்டான பிரச்சனைகள் விரைவில் ஒரு முடிவிற்கு வரும்.
சமயங்களில் நாமே நம் கனவில் இறந்தது போல் வருவது உண்டு.அவ்வாறு வரும் பொழுது நமக்கு உண்டான கண்டம் விலகும் என்பது நம்பிக்கை.மேலும் நம்முடைய ஆயுள் வலுவடையும்.இறந்தவர்கள் நம் கனவில் நமக்கு ஆசீர்வாதம் செய்வது போல் வந்தால் நமக்கு உண்டான தடை விலகி வெற்றி கிடைக்கும்.
ஒரு பொழுதும் இறந்தவர்கள் நம் கனவில் வந்து அழுவது கூடாது.அவ்வாறு நிகழும் பொழுது நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.அவ்வாறு கனவு வரும் போது இறந்தவர்கள் கஷ்டத்தில் இருப்பதாகவும் நம் வீட்டில் ஏதேனும் குறை உள்ளதை குறிப்பதாக இருக்கும்.
நோய்வாய்ப்பட்டு இறந்த ஒருவர் உங்கள் கனவில் வந்து ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் பேசினால், அவர்கள் நல்ல இடத்தில் இருப்பதாகப் பொருள்.இறந்தவர்களை நாம் தூக்கி சுமப்பது போல் கனவு கண்டால் நன்மையான செயல் நடக்கும்.
இதுவே, இறந்தவர்கள் நம் வீட்டில் படுத்து உறங்குவது போல கனவு கண்டால், பெரிய கண்டத்தில் இருந்து தப்பிப்பீர்கள். இறந்தவர்கள் நம்முடன் அமர்ந்து சாப்பிடுவது போல கனவு கண்டால், நற்புகழும், செல்வ செழிப்பும் ஏற்படும்.அதே இறந்தவர்கள் நமக்கு உணவு பரிமாறுவது போல் கனவு வந்தால் நம்முடைய தடைகள் யாவும் விலகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |