2025 செப்டம்பர் 7: இது தெரியாமல் கோயிலுக்கு செல்லாதீர்கள்
2025 ஆம் ஆண்டு சந்திர கிரகணம் ஏற்கனவே மார்ச் மாதம் முடிந்த நிலையில் செப்டம்பர் 7ஆம் தேதி அன்று மற்றொரு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்த கிரகணம் ஞாயிற்றுக்கிழமை அன்று முழு சந்திர கிரகணமாக நிகழ இருக்கிறது.
அன்றைய தினம் இரவு 9:57 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1.26 மணி வரை கிரகணம் நிகழ உள்ளது. பொதுவாக கிரகணம் நிகழும் பொழுது கோவில்கள் நடை சாத்தப்படுவது வழக்கம். இந்த சந்திர கிரகணம் இரவு நேரத்தில் நிகழ இருக்கிறது என்றாலும் அன்றைய தினம் பகலிலும் கோவில் நடை அடைக்கப்பட்டு பூஜைகள் நிறுத்தப்படுவதாக அறிவித்திருக்கிறார்கள்.
மேலும் கிரகணம் நிகழ இருப்பதை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு செப்டம்பர் 7ஆம் தேதி 12 மணி வரை கோவில் நடை அடைக்கப்பட்டு முக்கிய சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானத்திலிருந்து அறிவித்து இருக்கிறார்கள்.
இந்நிலையில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் அதனை சார்ந்த உப கோவில்களிலும் செப்டம்பர் 7ஆம் தேதி நடை அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள்.
அன்று தினம் மத்திம கால தீர்த்தம், மத்திம கால அபிஷேகம், மத்திம கால சுவாமி புறப்பாடு ஆகியவை பகல் 11.41 மணிக்கு நடைபெறுவதாக சொல்லி இருக்கிறார்கள். மேலும் அன்றைய தினம் மதியம் 12:30 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்து இருக்கின்றார்கள்.
எனவே மதியத்திற்கு மேல் தரிசனம் செய்யவும் அர்ச்சனை செய்யவும் அனுமதி இல்லை. மறுநாள் செப்டம்பர் 8ஆம் தேதி காலை முதல் வழக்கம்போல் தரிசனம் நடைபெறுவதாக மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் செப்டம்பர் 7 ஆவணி மாத பௌர்ணமி என்பதால் அன்றைய தினம் பலரும் மீனாட்சியம்மனை தரிசனம் செய்து அம்மனின் அருள் பெற வேண்டும் என்று கோவில்களுக்கு வருகை தர விரும்புவார்கள்.
இந்த சிரமத்தை தவிர்ப்பதற்காகவே நிர்வாகம் முன்னதாக இந்த அறிக்கை வெளியிட்டிருக்கிறது. தற்பொழுது மீனாட்சியம்மன் கோவிலில் 2025 ஆம் ஆண்டிற்கான ஆவணி மாத மூலத் திருவிழா நடைபெற்ற வருவது குறிப்பிடத்தக்கது.
இதில் சிவபெருமான் நடத்திய 64 திருவிளையாடல்களும் தினமும் நிகழ்த்தப்பட்டு வருகிறது. இதில் செப்டம்பர் 3 ஆம் தேதி புட்டு திருவிழா நடைபெற இருக்கிறது. இதற்கு மீனாட்சியம்மன் சுவாமியும் பழைய சொக்கநாதர் ஆலயத்திற்கு எழுந்தருள உள்ளதால் செப்டம்பர் 3ஆம் தேதி மீனாட்சி அம்மன் கோவில் நடை அடைக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







