2025 மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் கலந்து கொள்ள இதை செய்யுங்கள்
மதுரை ஒரு ஆன்மீக பூமி என்றே சொல்லலாம். மதுரையில் சித்திரை திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். அதை காண பல இடங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள். அப்படியாக, மதுரை ஆளும் அரசி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மதுரையில் சித்திரை மாதம் மிக சிறப்பாக நடைபெறும்.
இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணமும், திருமணம் ஆனவர்களுக்கு நல்ல இல்வாழ்கையும் அமையும் என்பது நம்பிக்கை. அதனால் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பல ஊர்களில் இருந்து வருகை தருவார்கள்.
மேலும், இந்த திருக்கல்யாண நிகழ்வில் கலந்து கொள்வதை பற்றி பலருக்கும் பல சந்தேகங்கள் இருக்கும். அதை பற்றி பார்ப்போம். மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வை காண ரூ.200, ரூ.500 என இரு கட்டணச்சீட்டுக்கள் வழங்கப்பட உள்ளன.
இந்த கட்டணச்சீட்டு பெற்றவர்கள் வடக்கு கோபுரம் வழியாகவும், கட்டணச்சீட்டு பெறாதவர்கள் இடவசதிக்கு ஏற்ப தெற்கு கோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்படுவார்கள்.
இதை பெற்று கொள்ள https://hrce.tn.gov.in மற்றும் https://madurai meenakshi.hrce.tn.gov.in என்ற இணையதளங்களில் ஏப்ரல் 29 முதல் மே 2 வரை முன்பதிவு செய்யலாம் என கோயில் நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல், ரூ.500 கட்டணச்சீட்டு ஒரு நபருக்கு இரண்டும், ரூ.200 கட்டணச்சீட்டு மூன்றும் பெற்றுக்கொள்ளலாம் என்றும், ஒரே நபர் இரண்டையும் பெற இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் கட்டண சீட்டை பெற விருப்பம் உள்ளவர்கள் அவர்களின் ஆதார், மொபைல் எண், அடையாள அட்டை உள்ளிட்ட விபரங்களை அளிக்க வேண்டும். மேலும், கோவில் அருகே மேற்கு சித்திரை வீதியில் உள்ள பிர்லா விஷ்ரம் தங்கு விடுதியில் நேரடியாகவும் கட்டணச்சீட்டை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |