தங்கள் புத்தி கூர்மையால் வெற்றிகளை தன் வசப்படுத்தும் 4 ராசிகள்
ஜோதிடத்தில் 12 ராசிகளுக்கும் ஒவ்வொரு குணங்கள் அமைந்து இருக்கும். அந்த குணங்கள் கொண்டு தான் அவர்களின் எதிர் காலம் அமையும். மேலும், ஒரு சில ராசிகளுக்கு இயல்பாகவே வெற்றிகளை தன் வசம் செய்யும் குணம் இருக்கும்.
அவர்கள் புத்தி கூர்மையால் எதையும் சாதிக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். அப்படியாக, 12 ராசிகளில் எந்த ராசிகள் தங்கள் புத்திசாலி தனத்தால் வெற்றிகளை குவிக்க போகிறார்கள் என்று பார்ப்போம்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்கள் இயல்பாகவே மிகவும் புத்திசாலியாக இருப்பார்கள். இவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். அவர்கள் இயல்பான பேச்சால் பலரையும் கவர்ந்து விடும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் பிறரை கணிப்பதிலும் மிகவும் சிறப்பாக இருப்பார்கள். வெற்றிக்கு மிகவும் பிடித்த ராசி மிதுனம் என்றே சொல்லலாம்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களிடம் சாதுரியமான பேச்சு இருக்கும். படிப்பில் சிறந்து விளங்கும் இவர்கள் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுப்பார்கள். உத்யோகத்தில் தலைமை பண்பு வகிப்பார்கள். இவர்கள் தொழில் ரீதியாக வரும் லாபம் நஷ்டத்தை கணிப்பதில் சிறந்து விளங்குவார்கள்.
துலாம்:
துலாம் ராசியினர் எப்பொழுதும் சம நிலை கொண்ட மனிதர்களாக இருப்பார்கள். எதையும் துணிந்து செய்யும் ஆற்றல் படைத்தவர்கள். தெரியாத விஷயங்களை தேடி படிப்பதில் ஆர்வம் மிக்கவர்கள். தங்கள் அறிவாற்றலை வளர்க்க விரும்புவார்கள். இவர்கள் பொறுமையுடன் செயல்படும் திறன் கொண்டதால் வெற்றிகளை தன் வசம் ஆக்குவதில் திறமை வாய்ந்தவர்களாக இருப்பார்கள்.
கும்பம்:
குடும்ப ராசியினர் எப்பொழுதும் மிக பெரிய படிப்பை படிக்கச் விரும்புவர்கள். இவர்களிடம் அதிகப்படியான திறமை ஒளிந்து இருக்கும். இவர்களிடம் நினைவாற்றல் அதிகம் இருக்கும். புதிய யோசனைகள் இவர்களுக்கு வெற்றியை கொடுக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |