இந்த ராசியில் பிறந்த பெண்கள் மனைவியாக கிடைத்தால் கணவன் கொடுத்து வைத்தவராம்

By Sakthi Raj Jul 22, 2026 07:32 AM GMT
Report

  ஜோதிட ரீதியாக ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கிறது. அப்படியாக, ஒரு சில ராசியில் பிறந்த பெண்கள் அவர்கள் பிறந்த பிறகு அவர்களுடைய குடும்பத்திற்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி கொடுப்பவராக இருப்பார்கள்.

அதேபோல், அவர்கள் கணவன் வீட்டிற்கும் அதிர்ஷ்டத்தை தேடி கொடுப்பார்களாம். அப்படியாக, எந்த ராசியில் பிறந்தவர்கள் எப்படிப்பட்ட மனைவியாக ஆளுமை கொண்டு இருப்பார்கள் என்பதைப் பற்றி பார்ப்போம்.

இந்த ராசியில் பிறந்த பெண்கள் மனைவியாக கிடைத்தால் கணவன் கொடுத்து வைத்தவராம் | Men Marry This Zodiac Women Are Seems Lucky

மேஷம்:

இவர்கள் மிகவும் துணிச்சலான மற்றும் கணவனுக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருக்கக்கூடிய மனைவியாக இருப்பார்களாம்.

ரிஷபம்:

இவர்கள் மிகுந்த பொறுமையுடனும் சாதாரண வீட்டையும் சொர்க்கம் போல் மாற்றக்கூடிய ஒரு தன்மை வாய்ந்தவர்களாக இருப்பார்களாம்.

மிதுனம்:

இவர்கள் மிகுந்த புத்திசாலியான மனைவியாக இருப்பார்கள். இவர்கள் கணவருக்காக நிறைய விஷயங்களை தியாகம் செய்ய முன்வருகிறார்கள்.

கடகம்:

இந்த ராசியில் பிறந்த பெண்கள்தான் குடும்பத்தினுடைய தூணாக இருக்கிறார்கள். குடும்பத்திற்காக எதையும் செய்ய துணிகிறார்கள்.

லக்னத்தில் சந்திரன் இருந்தால் அதிர்ஷ்டமா? தோஷமா? அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்

லக்னத்தில் சந்திரன் இருந்தால் அதிர்ஷ்டமா? தோஷமா? அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்

சிம்மம்:

இந்த ராசியில் பிறந்த பெண்கள் குடும்பத்தை தலை நிமிர்ந்து நடக்க செய்கிறார்கள். மிகவும் கம்பீரமான மனைவியாக இவர்கள் இருக்கிறார்கள்.

கன்னி:

நடக்கக்கூடிய விஷயங்களை சரியாக திட்டமிட்டு செயல்படுத்துவதில் சிறந்த மனைவியாக இவர்கள் இருக்கிறார்கள்.

துலாம்:

இவர்கள் குடும்பத்தில் எவ்வளவு பெரிய புயல் அடித்தாலும் அமைதியாக இருக்கக்கூடிய தன்மை உடையவர்கள். சாதுரியமாக செயல் பட்டு குடும்பத்தை ஒன்றிணைக்க கூடியவர்கள்.

விருச்சிகம்:

இவர்கள் எப்பேர்பட்ட சவால்களையும் உடைத்து குடும்பத்திற்காக உழைக்கக் கூடியவர்கள்.

தனுசு:

இவர்கள் குடும்பத்தினரிடம் சரியான நேரத்தில் சரியான பாதையை தேர்ந்தெடுப்பதற்கு உதவியாக இருக்க கூடியவர்கள்.

2026: அட்டகாசமான ஆகஸ்ட் மாதம்.. திடீர் திருப்பங்களை சந்திக்கப்போகும் கன்னி

2026: அட்டகாசமான ஆகஸ்ட் மாதம்.. திடீர் திருப்பங்களை சந்திக்கப்போகும் கன்னி

மகரம்:

குடும்பத்தினருடைய அஸ்திவாரமே இவர்கள்தான். இவர்களால் இவர்களுடைய குடும்பம் உயர்ந்த நிலைக்கு செல்கிறது.

கும்பம்:

இவர்கள் இல்லறத்தை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்வதற்கு மிகவும் கடினமாக உழைக்க கூடியவர்கள்.

மீனம்:

இவர்கள் இருக்கும் இடத்தில் எப்பொழுதும் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் அன்பான மனைவியாக இருக்கிறார்கள். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US