300 ஆண்டுகளாக ஆண்கள் மட்டுமே வழிபடும் கோயில்
நம்மை படைத்த இறைவனை மனதார வணங்கவும் அவன் ஆசியை பெறவும் கோயிலுக்கு செல்கின்றோம்.
அங்கே மன கவலைகள் நீங்கி இறைவனை தரிசித்துவிட்டு வருவதால் மனதில் சங்கடங்கள் நீங்கிவிடும்.
ஆனால் ஒரு சில கோயில்களில் பெண்களுக்கு அனுமதி இல்லை என்று உங்களுக்கு தெரியுமா? அதைப்பற்றி பார்க்கலாம்.
அஞ்சலான்குட்டை முனியப்பன் கோயில்
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள ஊர் வாழப்பாடி, இங்குள்ள அஞ்சலான்குட்டை முனியப்பன் கோவிலில் பெண்களுக்கு அனுமதியில்லை, ஆண்கள் மட்டுமே வணங்க வேண்டும், இந்த வழக்கம் சுமார் 300 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
வாழப்பாடியில் இருந்து 3 கி.மீ தொலையில் உள்ள கொட்டிப்பள்ளம் ஓடை அருகே இக்கோயில் அமைந்துள்ளது.
ஆள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த காட்டுப்பகுதியில் இக்கோயில் உள்ளது, மூலவருக்கு வடதிசையில் சடாமுனி, வாயுமுனி, செம்முனி சுவாமி சிலைகள் காணப்படுகின்றன.
மிரட்டும் கண்கள், முறுக்கு மீசையுடன் கையில் அரிவாள் என மிக கம்பீரமாக சிலைகள் காட்சியளிக்கின்றன.
ஆண்கள் மட்டுமே பொங்கல் வைத்து சுவாமிக்கு படைக்கின்றனர், கிடா, கோழியை படைத்து அங்கேயே சமைத்து சாப்பிடுகின்றனர்.
முனி நடமாட்டம் இருப்பதாகவும், இரவில் குடுகுடுப்பைக்காரர்கள் வருவார்கள் என்பதால் பெண்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கம் 300 நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டும் வருகிறது, சுவாமிக்கு கோழி, கிடா பலியிட்டு ஆண்களை சமைக்கின்றனர்.
அங்கேயே சாப்பிட்டும் வருகின்றனர், பொங்கல், கறியை கூட பெண்கள் சாப்பிடக்கூடாது, சக்தி வாய்ந்த தெய்வம் என்பதால் கோயிலின் விபூதியை கூட பெண்கள் வைப்பது கிடையாது.
அப்பகுதி ஆண்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஆண்கள் செவ்வாய்/ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்றனர்.
திருமணம் சீக்கிரம் நடைபெறவும், குழந்தை பேறுக்காகவும், நினைத்த காரியம் தடையின்றி நடைபெறவும் ஆண்கள் படையலிடுகின்றனர்.
இதுதவிர குதிரை, ஆடு, மாடு, நாய் சிற்பங்களும், குழந்தைகளின் சிற்பங்களையும் வைத்து பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |