ரிஷபத்தில் புதன் - சுக்கிரன் உதயம்: இந்த ராசிகளுக்கு இனி ராஜ வாழ்க்கை தான்!
ஜோதிட ரீதியில் கிரக பெயர்ச்சிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட காரணம், நவகிரகங்களின் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் 12 ராசிகளின் வாழ்க்கையிலும் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என்பதால் தான்.
கிரகங்கள் அவ்வப்போது ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுவது மட்டுமின்றி, சில கிரகங்கள் அஸ்தமனமாகி உதயமாகவும் செய்யும் மேலும் சில முக்கிய கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜ யோகங்களும் அனைத்து ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் மே 23 ஆம் திகதியான இன்று அறிவாற்றலின் கிரகமான புதன் மற்றும் அழகு, ஆடம்பரத்தின் கிரகமான சுக்கிரன் ரிஷப ராசியில் உதயமாகவுள்ளதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்ததை ஏற்ப்படுத்தும்.
ரிஷபம்

ரிஷப ராசியின் முதல் வீட்டில் புதன் உதயமாவதால் இவர்களுக்கு தன்னம்பிக்கையும், தைரியடும் அதிகரிக்கும்.
இந்த காலகட்டத்தில் ஆரம்பிக்கும் எந்த வேலையிலும் அமோக வெற்றி உண்டாகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
வணிகர்கள் ஈடுப்பட்டு வருவர்களுக்கு எதிர்ப்பாராத வகையில் லாபம் கிடைப்பதற்கு வாய்ப்பு காணப்படுகின்றது. திருமண வாழ்க்கையில் இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கி சுக்கிரன் ஆசியால் தம்பதியினரிடையே காதல் அதிகரிக்கும்.
கடகம்

கடக ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் உதயமாகியிருப்பதால், இவர்களின் வியாபாரம் மற்றும் தொழிலில் அசுர வளர்ச்சி உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்குவற்கான வாய்ப்புகள் உருவாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டு.
பல வருட கடன் தொல்லைகளுக்கு முடிவு கட்டும் வகையில் நிதி நிலையில் எதிர்பாரத அளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் தாாகவே கூடிவரும்.
காதல் வாழ்க்கையில் சந்தோஷமும், நிம்மதியான சூழலும் உருவாகும். இவர்களின் வாழ்க்கையில் இருந்துவந்த நீண்ட நாள் துன்பங்கள் நீங்கி ஒரு மகிழ்ச்சியான சூழலை அனுபவிப்பதற்கான வாய்ப்பு அமையும்.
கன்னி
கன்னி ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் உதயமாகியுள்ளதால் இவர்களுக்கு குறைந்த முயற்ச்சியிலேயே காரியங்கள் வெற்றியாகும்.
பொருளாதாரத்தில் நீண்ட காலமாக இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கி செல்வ செழிப்பு விரைவாக அதிகரிக்கும். பணவரவு பல வழிகளில் இருந்தும் கிடைக்க வாய்ப்புள்ளது. சேமிப்புக்கு வாய்ப்புண்டும.
பல ஆண்டுகள் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவுக்கு வரும். இவர்களின் குடும்ப வாழ்க்கையில் இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.