2026: புதன் விசாக நட்சத்திரப் பெயர்ச்சி.. இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது
ஜோதிட பஞ்சாங்கத்தின் அடிப்படையில் தற்போது புதன் பகவான் சுவாதி நட்சத்திரத்தில் பயணம் செய்து வருகிறார். அவர் 2026 ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி காலை 11 மணி அளவில் குரு பகவானின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட விசாக நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.
பிறகு அவர் டிசம்பர் 4ஆம் தேதி வரை அதே நட்சத்திரத்தில் பயணம் செய்ய இருக்கிறார். அதன் பின் அனுஷ நட்சத்திரத்திற்கு மாறுகிறார். சந்திரராசி அடிப்படையில் இந்த நட்சத்திர மாற்றம் மூன்று ராசிக்காரர்களுக்கு நல்ல மாற்றங்களாக அமையப் போகிறது. அவர்கள் யார் என்று பார்ப்போம்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு புதனுடைய இந்த விசாக நட்சத்திர பயணம் இவர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக நீண்ட நாட்களாக திட்டமிட்டு வந்த புதிய முயற்சிகளுக்கு கைக்கொடுக்கப் போகிறது.
புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கு உகந்த நேரமாக இருக்கிறது. வேலை தொடர்பாக அலுவலகத்தில் உங்களுடைய தனித்திறமைகள் வெளிப்படும். உயர் அதிகாரிகள் உடைய பாராட்டையும் மதிப்பையும் பெறுவீர்கள். கலை மற்றும் படைப்பு துறையில் புதிய சிந்தனை பிறக்கும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு புதன் பகவானுடைய இந்த விசாக நட்சத்திர பெயர்ச்சியானது இவர்களுக்கு மிகவும் சாதகமான பலன்களை கொண்டு வந்து சேர்க்கப்போகிறது. பொருளாதாரம் மற்றும் வியாபார முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றங்கள் எதிர்பார்க்கலாம். புதிய தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பணியிடங்களில் உங்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பு உண்டாகும். இந்த காலகட்டங்களில் பணவரவு சிறப்பாக இருக்கும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு புதன் பகவான் உடைய இந்த பெயர்ச்சியானது இவர்களுக்கு ஒரு புதிய மாற்றத்தையும் வாழ்க்கையில் கொண்டு வரப்போகிறது. புதிய கதவுகளையும் திறக்க எதிர்பார்த்தது போல் திறக்ககாத்திருக்கிறது.
குறிப்பாக இவர்களுடைய உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி தொடர்பான விஷயங்கள் சிறப்பாக இருக்கும். வெளிநாடு சென்று படிக்க விருப்பம் மாணவர்களுக்கு கனவு நிறைவேறும். வியாபாரங்களில் புதிய வியூகங்களை கண்டுபிடிப்பீர்கள். இறை வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும்.
Disclaimer:
இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |