முதன்முறை ஒரு கோயிலுக்கு செல்லும் பொழுது மறந்தும் செய்யக்கூடாத தவறுகள்
நம்முடைய இந்தியாவில் பல்வேறு சக்தி வாய்ந்த விஷேச கோயில்கள் இருக்கிறது.அப்படியாக நம் அனைவருக்கும் எல்லா கோயில்களையும் தரிசிக்கும் வாய்ப்புகள் கிடைப்பது இல்லை.இருப்பினும் நாம் எவ்வளவு தொலைவாக இருந்தாலும் பயணம் செய்து சுவாமியை தரிசனம் செய்ய முயற்சி செய்வோம்
அந்த வகையில் முதன்முறை ஒரு கோயிலுக்கு சென்று சுவாமி வழிபாடு செய்யும் பொழுது நாம் கவனிக்க வேண்டிய பல விஷயங்கள் இருக்கிறது.அதாவது நாம் அடிக்கடி செல்லும் கோயிலை காட்டிலும் முதன்முறை செல்லும் பொழுது அதற்கு அதீத சக்திகள் உண்டு.
ஆதலால் நம்முடைய சிந்தனைகளிலும் வேண்டுதலிலும் நாம் கவனமாக இருக்கவேண்டும்.நாம் முதன்முறை சென்று இறைவனிடம் என்ன வேண்டுதல் வைகின்றமோ அவை நிச்சயம் நடக்கும் என்பது நம்பிக்கை.நம்மில் சிலர் சொல்லி கேள்வி பட்டு இருப்போம்.
அதாவது என் உறவினர் ஒருவர் சொல்லி கோயிலுக்கு சென்றேன்,இதற்கு முன் அந்த கோயிலை பற்றிய எந்த ஒரு தகவலும் தெரியாது.மிகவும் சக்தி வாய்ந்த கோயில் என்று சொன்னார்கள்.நானும் நம்பிக்கையோடு சென்றுவந்தேன்.அதிசயம் என்னுடைய பல நாள் பிரச்சனை முடிவிற்கு வந்தது என்று.
இது தான் முதல் முறை நாம் சென்று வழிபாடு செய்வதின் பலன்.அதாவது முதன்முறை செல்லும் பொழுது நம் மனதில் அதீத நம்பிக்கை இருக்கும்.இங்கு சென்றால் கட்டாயம் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றம் நடக்கும்,புது வாழ்வு உண்டு என்ற நம்பிக்கையில் செல்ல நம் பக்திக்கும் அதிக சக்திகள் உருவாகிறது.
அதோடு அங்கு சென்று இறைவழிபாடு செய்ய இறைவன் அருளால் வேண்டுதல் நிறைவேறி மனதில் மகிழ்ச்சி பொங்குகிறது.அதே போல் ஒவ்வொரு கோயில்களுக்கும் நம்முடைய கர்மவினைகளை கழிக்கும் சக்திகள் உண்டு.ஆதலால் தான் முன்னோர்கள் ஆலயம் சென்று தரிசனம் செய்வது வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை கொடுக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |