கோவிலில் நவக்கிரகங்களை வழிபடுகிறீர்களா? இந்த தவறுகள் செய்யாதீங்க

By Pavi Mar 09, 2026 03:41 AM GMT
Report

கோவிலில் நாம் நவக்கிரகங்களை வழிபடும் போது அங்கே நாம் நமக்கே தெரியாமல் சில தவறுகளை செய்கின்றோம். அந்த தவறுகள் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

கோவிலில் நவக்கிரகங்களை வழிபடுகிறீர்களா? இந்த தவறுகள் செய்யாதீங்க | Mistakes Made While Worshipping The Navagrahas

 நவக்கிரகங்கள்

எல்லா கோவில்களிலும் நவக்கிரகம் இருக்கும். நவ கிரகங்கள் என்பது ஒன்பது கிரகங்கள். அதாவது (சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி, ராகு, கேது) போன்ற கிரகங்களாகும்.

நவக்கிரகங்களின் ஆசீர்வாதம் எல்லோருக்கும் அவசியமாக வேண்டும். காரணம் நவக்கிரகங்களை நாம் வழிபட்டால் நமது வாழ்க்கையில் கெட்டவற்றை நீக்கி நல்லவற்றை கொடுக்கும்.

கோவிலில் நவக்கிரகங்களை வழிபடுகிறீர்களா? இந்த தவறுகள் செய்யாதீங்க | Mistakes Made While Worshipping The Navagrahas

நவகிரகங்களுக்கு உரிய தினங்களில், தகுந்த வஸ்திரம், மலர் மற்றும் நவதானியங்களை வைத்து, முறைப்படி 7 அல்லது 9 முறை வலம் வந்து வழிபட, கிரக தோஷங்கள் நீங்கி, நல்வாழ்வு மற்றும் யோகம் கிடைக்கும் என ஜோதிடம் மூலம் கூறப்படுகின்றது.

ஆனால் கோவிலில் அனேகமானோர் தகுந்த முறையில் நவக்கிரகங்களை வணங்கும் போது பல பிழைகள் செய்கின்றனர். அதை பற்றி பதிவில் பார்க்கலாம்.

கோவிலில் நவக்கிரகங்களை வழிபடுகிறீர்களா? இந்த தவறுகள் செய்யாதீங்க | Mistakes Made While Worshipping The Navagrahas

தவறுகள்

கோவிலுக்கு சென்றவுடன் எப்போதும் முதலில் விநாயகரை வணங்க வேண்டும். பின்னர் அந்த ஆலயத்தின் மூலவரை வணங்க வேண்டும். பின்னர் கடைசியாக தான் நவகிரக சன்னதியை வணங்க வேண்டும்.

நவக்கிரகங்களை நேரடியாக வணங்க கூடாது. முதலில் விநாயகரை, அடுத்து மூலவரை வணக்கிய பின்னரே நவக்கிரகங்களை வழிபட வேண்டும். 

சனி பகவானை வணங்கும் போது அவரை நேரே நின்று வணங்காமல் ஒரு ஓரமாக நின்று வணங்க வேண்டும். 

 மற்றவர்களுடன் பேசிக்கொண்டு அல்லது போனில் பேசிக்கொண்டோ நவக்கிரகங்களை வழிபட கூடாது. 

நவகிரகங்களை வணங்கும் போது அந்த சிலைகளை  கைகளால் தொட கூடாது.  நவக்கிரகங்களை எப்போதும் தள்ளி நின்று தான் வணங்க வேண்டும்.

கோவிலில் நவக்கிரகங்களை வழிபடுகிறீர்களா? இந்த தவறுகள் செய்யாதீங்க | Mistakes Made While Worshipping The Navagrahas

மிக முக்கியமாக பெண்கள் குறிப்பிட்ட வயது வரை தான் எந்த விக்கிரகத்தையும் தொட்டு வணங்க முடியும். 

நவகிகங்களை ஒருபோதும் இடதுபக்கமாக சுற்றகூடாது. எப்போதும் வலது பக்கமாக தான் சுற்ற வேண்டும்.  சிலர் வலது பக்கமாக 7 சுற்று சுற்றி விட்டு ராகு, கேதுவிற்காக 2 சுற்றை இடது புறமாக சுற்றுவார்கள்.

இது முற்றிலும் தவறானது.  இதில் இன்னுமொரு விடயமும் உள்ளது நவக்கிரகங்களை சுற்றி வணங்கிய பின் திரும்பி பார்க்காமல் வர வேண்டும். 

சனிக்கிழமைகளில் மட்டும் நவகிரகங்களை 9 முறை சுற்றினால் போதும். நீங்கள் தினமும் கோவிலுக்கு செல்கிறீர்கள் என்றால் ஒருமுறை சுற்றினால் போதும். ஒன்பது முறை சுற்ற வேண்டிய அவசியமில்லை. 

கோவிலில் நவக்கிரகங்களை வழிபடுகிறீர்களா? இந்த தவறுகள் செய்யாதீங்க | Mistakes Made While Worshipping The Navagrahas

நவகிரகங்களைச் சுற்றும் போது கைகளைக் கட்டிக்கொண்டோ, தட்டிக்கொண்டோ சுற்ற கூடாது. கைகளை விரித்தபடி அமைதியாக வலம் வர வேண்டும். 

நவகிரகங்களுக்கு விளக்கு போடும் போது மற்றவர்களின் விளக்கை பயன்படுத்த கூடாது. எப்போதும் புதிய விளக்கு வாங்கி பயன்படுத்த வேண்டும். 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US