ரிஷப ராசியினர் தொழிலில் கவனமாக இருக்க வேண்டிய அந்த ஒரு விஷயம் என்ன?
ஜோதிடத்தில் சுக்கிர பகவானின் ஆதிக்கத்தை கொண்ட ரிஷப ராசியினர் மிகுந்த பிடிவாத குணம் கொண்டவர்கள்.
அந்த வகையில், ஜோதிடர் ராம்ஜி அவர்கள் ரிஷப ராசியினர் அவருடைய வாழ்க்கையில் எந்த விஷயங்களை கடைப்பிடித்தால் மிகப்பெரிய அளவில் பணம் சம்பாதிக்கக்கூடிய யோகத்தை பெறலாம் என்பதை பற்றி பகிர்ந்து கொள்கிறார். அதைப் பற்றி பார்ப்போம்.
ஜோதிட ரீதியாக ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு தன்மை இருக்கும். அந்த தன்மையை நாம் புரிந்துகொண்டு அதற்கு தகுந்தாற்போல் தொழிலை தேர்வு செய்து நாம் வணிகம் செய்கின்ற பொழுது நிச்சயம் நமக்கான ஒரு நல்ல பயன் கிடைக்கும்.
அந்த வகையில், ரிஷப ராசினர் தொழில் என்று எடுத்துக் கொள்கின்ற பொழுது அவர்கள் ஆடம்பரமான வீட்டு அலங்கார பொருட்கள், இன்டிரியர் டிசைனிங் மற்றும் உயர்தர பர்னிச்சர் வணிகம் போன்றவை இவர்களுக்கு நல்ல பலன் பெற்றுக் கொடுக்கும்.

மேலும், புதன் பகவானின் ஆதிக்கத்தால் இவர்கள் தரமான உணவு பொருட்கள் ஆர்கானிக் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் மற்றும் அரிதான வாசனை திரவியங்கள் அல்லது ஸ்பைசஸ் போன்ற தொழிலும் இவர்களுக்கு சிறந்த பலனை பெற்றுக் கொடுக்கும்.
ரிஷப ராசியினர் பேஷன் ஜுவல்லரி, அழகு சாதன பொருட்கள், ஈவன் மேனேஜ்மென்ட் போன்றவையும் இவர்களுக்கு ஒரு நல்ல பொருத்தமான துறைகளாக இருக்கிறது.
அதைவிட குறிப்பாக இவர்கள் வங்கி பணி, சொத்து மற்றும் நிலம் பதிவு தொடர்பான பணிகள் மருத்துவ உபகரணங்கள் அல்லது முதல் உதவி பொருட்கள் வழங்கும் சேவை தொழில்கள் இவர்களுக்கு நிச்சயம் வெற்றி உண்டு.

இவர்கள் முடிந்தவரை எப்பொழுதுமே தங்களுடைய உடன்பிறந்தவர்களுடனும் அல்லது வாழ்க்கை துணையுடனும் கூட்டுத்தொழில் செய்வதை தவிர்ப்பது நல்லது. காரணம், இவர்கள் வணிகத்திற்கும் குடும்ப உறவிற்கும் சில சிக்கல்கள் ஏற்படுத்தலாம்.
ரிஷப ராசியினர் எப்பொழுதும் தன்னுடைய பொருள் தரத்தில் சமரசம் செய்து விடவே கூடாது. சிறந்த தரம் அவர்கள் பின்பற்றி செய்யும் பொழுது வாழ்க்கையில் அவர்கள் எதிர்பாராத உச்சகட்டத்தை அடுத்தடுத்து நோக்கி நகர்கிறார்கள்.
மேலும், ரிஷப ராசியினுடைய தொழில் வாழ்க்கை மற்றும் பண வரவை பற்றி பல்வேறு தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் அதை இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |