மோகினி ஏகாதசி 2025: பண கஷ்டங்கள் தீர சொல்ல வேண்டிய மந்திரங்கள்
மோகினி ஏகாதசி என்பது இந்து மாதமான வைசாகாவின் சுக்ல பக்ஷத்தின் பதினோராவது நாளில் வருகிறது. இந்த புனித நாளில் தான் விஷ்ணு பகவான் மோகினி அவதாரம் எடுத்து தீய சக்திகளை அழித்தார் என்பது நம்பிக்கை.
அதனால் அன்றைய தினம் நாம் விஷ்ணு பகவானை மனதார நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்து, சில மந்திரங்கள் சொல்லுவதால் நமக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் எல்லாம் விலகும் என்பது நம்பிக்கை. குறிப்பாக திடீர் பொருளாதார நெருக்கடிகளால் அவதி படுபவர்கள் இன்றைய தினம் விஷ்ணு பகவானின் இந்த 5 மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்வதால் நம்முடைய நிதி நிலையில் நல்ல மாற்றம் உண்டாகும் என்கிறார்கள்.
பணக் கஷ்டம் தீர 5 விஷ்ணு மந்திரங்கள் :
1. ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ
2. சாந்தாகாரம் புஜாகசயனம் பத்மநாபம் சுரேஷம் விஷ்வதாரம் ககனசத்ருஷம் மேகவர்ணம் சுபாங்கம் லக்ஷ்மிகாந்தம் கமலநயனம் யோகிபிர் த்யானகம்யம் வந்தே விஷ்ணும் பவ பய ஹரம் சர்வ லோகைக்க நாதம்
3. ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம் லக்ஷ்மி வாசுதேவாய நமஹ
4. த்வமேவ மாதா ச பிதா த்வமேவ த்வமேவ பந்துஷ்ச சகா த்வமேவ த்வமேவ வித்யா திரவிணம் த்வமேவ த்வமேவ சர்வம் மம தேவ தேவா
5. ஓம் ஸ்ரீ விஷ்ணவே ச வித்மஹே வாசுதேவாய தீமஹி, தன்னோ விஷ்ணு பிரசோதயாத்
இந்த வருடம், மே மாதம் 8-ஆம் தேதி மோகினி ஏகாதசி வருகிறது. அன்றைய தினம் மனதார விஷ்ணு பகவானை நினைத்து நம்பிக்கையோடு இந்த மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்வதால் கட்டயாம் நம்முடைய வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பங்கள் எல்லாம் விலகி நல்வழி பிறக்கும் என்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |