இந்த 3 மாதங்களில் பிறந்தவர்கள் மிகவும் புத்திசாலியாக இருப்பார்களாம்
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு குண நலன்கள் இருக்கும். அதாவது ஒருவர் பிறந்த மாதத்தைக் கொண்டு அவர்களின் ஆளுமை, வாழ்க்கை முறையை பற்றி நாம் சொல்லி விடலாம். அந்த வகையில், 12 மாதங்களில் குறிப்பிட்ட சில மாதங்களில் பிறந்தவர்கள் மற்றவர்களை விட மிகவும் புத்திசாலியாக இருப்பார்களாம். அவர்கள் யார் என்று பார்ப்போம்.
நவம்பர்:
இந்த மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் தொலை நோக்கு பார்வைக் கொண்டவர்கள். மற்றவர்களை விட வித்யாசமாக சிந்தித்து செயல்படக் கூடியவர்கள். இவர்களுக்கு கலை மீது அதிக ஆர்வம் இருக்கும். எதையும் தீர ஆராய்ந்து செய்யும் குணம் படைத்தவர்கள். எவ்வளவு தோல்வியும் எதிர்ப்புகள் வந்த போதிலும் இவர்கள் அறிவை வளர்த்துக் கொண்டு முன்னேறுவதில் முனைப்போடு இருப்பார்கள். தொழில் ரீதியாக இவர்களின் அறிவைக் கொண்டு மிகப் பெரிய அளவில் வெற்றி காண்பார்கள்.
மார்ச்:
இந்த மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். பிறருக்கு யோசனை சொல்வதிலும், வழி நடத்துவதிலும் இவர்கள் தலை சிறந்து விளங்குவார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் தலைமை பொறுப்புகளில் இருக்கக் கூடியவர்கள். தேடி தேடிப் படிப்பதிலும் ஒரு விஷயங்களைக் கற்றுக் கொள்வதிலும் அதிக ஆர்வம் கொண்டவர்கள். அதனால் இவர்களுக்கு அதிக அளவில் அறிவும் அனுபவமும் இருக்கும்.
ஜூலை:
இந்த மாதத்தில் பிறந்தவர்கள் எதையும் துணிந்து செய்யும் ஆற்றல் கொண்டவர்கள். இவர்களுக்கு அவர்களின் மீது அதிக நம்பிக்கை இருக்கும். இவர்கள் எப்பொழுதும் தான் பின்தங்கிய நிலையில் இருந்து விடக்கூடாது என்று அவர்கள் அறிவை வளர்த்துக் கொள்வதில் அதிக ஆர்வம் உடையவர்கள். படிப்பதற்கு இவர்கள் அதிக அளவில் ஆர்வம் இருக்கும். எவ்வளவு பெரிய பிரச்சனை என்றாலும், எளிதாக சமாளிக்கும் திறன் கொண்டவர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







