உங்களுடைய வீட்டில் தெய்வ நடமாட்டம் இருப்பதற்கான அறிகுறிகள் என்னென்ன?
பொதுவாக நம் வீட்டில் தெய்வசக்தி இருக்கும் போது நம் குடும்பம் செல்வ செழிப்புடன் இருக்கும்.
தெய்வத்தின் சக்தி நம்முடன் இருந்தால் முன்கூட்டியே ஏதேனும் ஆபத்து வரும்போது அதை தெரிவிக்கும் அறிகுறிகள் நமக்கு காட்டும்.
அந்தவகையில், வீட்டில் தெய்வ நடமாட்டம் இருப்பதற்கான அறிகுறிகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.
என்னென்ன அறிகுறிகள்?
பறவைகள், காகம், சிட்டுக்குருவி, குளவி உயிரினங்கள் அடிக்கடி வீட்டிற்கு வந்தால், தெய்வீக சக்தி இருப்பதாக அர்த்தம்.
பசுமாடு உங்கள் வீட்டிற்கு உணவு தேடி வந்தால், கண்டிப்பாக வீட்டில் நேர்மறையான ஆற்றல் தெய்வீக சக்தி நிறைந்திருக்கிறது என்று அர்த்தம்
வீட்டிற்குள் செல்லும் போது அவ்வீடு நறுமணம் நிறைந்ததாக இருந்தால் அந்த வீட்டில் தெய்வசக்தி இருப்பதாக பொருள்.
வீட்டில் விளக்கேற்றும்போது தானாக அணையாமல் நீங்களே விளக்கை அணைக்கும் வரை இருந்தால் அந்த வீட்டில் நேர்மறையான சக்தி இருப்பதாக பொருள்.
வீட்டில் ஒரு தெய்வத்தின் பெயரை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டேயிருக்கிறீர்கள் என்றால் அந்த தெய்வத்தின் சக்தி அந்த வீட்டில் நிறைந்திருப்பதாக அர்த்தம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







