நீங்கள் துலாம் ராசியில் பிறந்தவர்களா? உங்களுக்கு மிகவும் பலமான நட்சத்திரம் யார் தெரியுமா?

By Sakthi Raj Nov 07, 2026 04:37 AM GMT
Report

 ஜோதிடத்தில் ஏழாவது ராசியாக இருக்கக்கூடிய துலாம் ராசியினர் நீதி, நேர்மை நியாயம் கடைபிடிப்பதிலும் கலைத்துறைகளில் சிறந்து விளங்க கூடியவர்களாகவும் ரசனை மிக்கவர்களாகவும் இருக்கக் கூடியவர்கள்.

அப்படியாக, துலாம் ராசியினருக்கு திருமணம் என்று வருகின்ற பொழுது இவர்களுக்கு பலம் மற்றும் பலவீனமாக இருக்கக்கூடிய நட்சத்திரங்கள் யார் என்பதை பற்றி நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ராம்ஜி அவர்கள். அதைப்பற்றி பார்ப்போம்.

துலாம் ராசி என்று எடுத்துக் கொள்கின்ற பொழுது சித்திரை, ஸ்வாதி, விசாகம் நட்சத்திரம் உள்ளது. மேலும், ஒரு திருமண பொருத்தம் என்று பார்க்கின்ற பொழுது அந்த நட்சத்திரத்திற்கு பொருத்தமான நட்சத்திரம் பார்த்து திருமணம் செய்து வைப்பது ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கும்.

வாழ்க்கையை மாற்றும் மகா கந்த சஷ்டி விரதம்.. எப்படி இருப்பது?

வாழ்க்கையை மாற்றும் மகா கந்த சஷ்டி விரதம்.. எப்படி இருப்பது?

அதாவது, ஒரு இரு பொருத்தமான நட்சத்திரங்கள் இணையும் பொழுது இயல்பாகவே புரிதலும், பொருளாதார வளர்ச்சியும், மகிழ்ச்சியும், நிம்மதியும் இருக்கிறது.

அதுவே பொருத்தமில்லாத நட்சத்திரத்துடன் இணைகின்ற பொழுது அவர்களுக்கு இடையே சிறு சிறு விவாதங்களும் விரிசலும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

அப்படியாக, துலாம் ராசி எடுத்துக் கொள்கின்ற பொழுது இவர்கள் பரணி, பூரம், உத்திராடம் போன்ற நட்சத்திரங்களுடன் தேவையில்லாத மன அழுத்தங்களையும் பிரச்சனைகளையும் சந்திக்கக் கூடிய நிலை இருப்பதால் இவர்கள் சற்று கவனமாக இவர்களுடன் பயணிப்பது நல்லது என்று சொல்கிறார்கள்.

தீபாவளி உணர்த்தும் நீதியின் ரகசியம்? கட்டாயம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை

தீபாவளி உணர்த்தும் நீதியின் ரகசியம்? கட்டாயம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை

 

மேலும், ஜோதிடம் என்பது ஒரு மருத்துவர் உடைய ஆலோசனை போன்றது என்றும் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றங்களை பெற வேண்டும் என்றால் அந்த ஆலோசனைகளை நாம் எடுத்துக் கொள்வது தவறு இல்லை ஒரு நல்ல வழிகாட்டியாக அமையும் என்று பல்வேறு ஜோதிட தகவல்களை நம்மோடு புரிந்து கொள்கிறார்.

மேலும், துலாம் ராசியினுடைய வாழ்க்கைக்கு பொருத்தமான மற்றும் பலமாக அமையக்கூட நட்சத்திரங்கள் யார் என்பதை முழுமையாக இந்த காணொளியில் பார்த்து நாம் தெரிந்து கொள்வோம்.      

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US