வீடுகளை தீய சக்திகள் நெருங்காமல் இருக்க சொல்ல வேண்டிய முனீஸ்வரர் மந்திரம்

By Sakthi Raj Sep 07, 2026 07:31 AM GMT
Report

  காவல் தெய்வங்களில் முனீஸ்வரர் மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் நீதி நியாயத்தை நிலை நாட்டி கொடுப்பவர். பக்தர்கள் தங்களுக்கு நடக்கும் அநீதிக்கு முனீஸ்வரனை சரண் அடைந்தால் 48 நாட்களில் அவர்களுக்கான தீர்வை வாங்கி கொடுப்பவர்.

அப்படியாக, முனீஸ்வரரின் மந்திரத்தை வீடுகளில் பாராயணம் செய்ய நம் வீடுகளில் சூழ்ந்து இருக்கும் தீய சக்திகளும், எதிரிகளால் ஏற்படும் தொல்லைகளும், உடல் நலக்குறைவு, பொருளாதார நெருக்கடிகள் யாவும் விலகும்.

அந்த வகையில் கீழ்கண்ட முனீஸ்வரர் மந்திரத்தை தினமும் 3 முறை வீடுகளில் அமர்ந்து முனீஸ்வரர் நினைத்து வழிபாடு செய்ய நினைத்த காரியம் நடக்கும். உங்களை சூழந்து உள்ள தீயசக்திகள் யாவும் விலகும்.

வீடுகளை தீய சக்திகள் நெருங்காமல் இருக்க சொல்ல வேண்டிய முனீஸ்வரர் மந்திரம் | Muneeswaran Mantra To Remove Negative Energy

பகவத் கீதை தத்துவங்கள்: இனிமையாக பேசும் எல்லோரும் நன்மை செய்வார்களா?

பகவத் கீதை தத்துவங்கள்: இனிமையாக பேசும் எல்லோரும் நன்மை செய்வார்களா?

மந்திரம்:

"ஓம் ஹம் ஜடா மகுடதராய உக்ர ரூபாய துஷ்ட மர்தனாய சத்ரு சம்ஹாரனாய ஜடா முனீஸ்வராய நமஹ"

பொருள்:

ஜடா முடியைத் தரித்தவரும், உக்கிர ரூபம் கொண்டவரும், தீயவர்களை தேடி சென்று அழிப்பவரும், எதிரிகளை சம்ஹாரம் செய்பவருமான ஜடா முனீஸ்வரருக்கு எனது வணக்கங்கள்.

வீடுகளை தீய சக்திகள் நெருங்காமல் இருக்க சொல்ல வேண்டிய முனீஸ்வரர் மந்திரம் | Muneeswaran Mantra To Remove Negative Energy

செவ்வாயுடன் இந்த கிரகம் இணைந்து இருந்தால் தொழிலில் ஜாக்பாட் அடிப்பார்களாம்

செவ்வாயுடன் இந்த கிரகம் இணைந்து இருந்தால் தொழிலில் ஜாக்பாட் அடிப்பார்களாம்

அதேபோல், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமையில் அருகில் இருக்கும் முனீஸ்வரன் ஆலயம் சென்று அங்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை 27 முறை அல்லது 108 முறை பாராயணம் செய்யுங்கள். உங்கள் குடும்பத்திற்கு முனீஸ்வரன் கேட்ட வரங்களை தருவதோடு, குடும்பத்திற்கு பாதுகாவலராக அமைவார்.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US