அரசருக்கு லாபமாக மரணத்தை கொடுத்த முனிவர்
நாம் அன்றாட வாழ்க்கையில் நிறைய தேவையற்ற செயல்களை செய்கின்றோம்.அதில் ஒன்று தான் கோபம்.
அதாவது நீ செய்வது பிடிக்கவில்லை என்று சுட்டிக்காட்ட பல வழிகள், நல்ல முறைகள் இருந்தாலும் பெரும்பாலும் தனக்கு பிடிக்காத ஒன்றை சிலர் செய்து விட்டால் அவர்கள் உணர்ச்சியை வெளிப்படுத்த அவர்கள் கையில் எடுக்கும் முதல் ஆயுதம் கோபம்.
அப்படி ஒரு மன்னர் தேவை இல்லாமல் கோபம் கொள்ள அந்த கோபமே அவரை கொல்ல நேரிட்டது. அதை பற்றி பார்ப்போம்.
ஒரு நாள் ஒரு மன்னர் காட்டிற்கு மிருகங்களை வேட்டையாட சென்று இருந்தார்,அங்கும் இங்கும் வேட்டையாடிய களைப்பில் அவருக்கு அடக்கமுடியாத தண்ணீர் தாகம் ஏற்பட்டது. ஆக சுற்றிலும் தண்ணீர் குடிப்பதற்கான சூழ்நிலைகள் இல்லாமல் தண்ணீர்க்காக தேடி அலைந்தார்.
அப்பொழுது ஒரு குடிசை கண்ணீல் தென்பட்டது.அங்கு ஒரு முனிவர் ஆழ்த்த தவத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார். தவம் என்றாலே தன்னை மறந்து தன்னுள் ஆழ்ந்து சென்று இறைவனை தேடுவது தான்.
இது மன்னருக்கு தெரிந்தும்,தவத்தில் ஆழ்ந்த முனிவரிடம் ,முனிவரே எனக்கு கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?வேட்டையாடிய களைப்பாக இருக்கிறது எங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை அடக்கமுடியாத தாகம் குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்க, முனிவர் கண்கள் திறக்காமல் ஆழ்ந்த தவத்தில் இருந்தார்.
இதை கண்ட மன்னனுக்கு மிகுந்த கோபம் ஒரு அரசன் குடிசை ஏறி தண்ணீர் கேட்கிறேன் எதுவும் கண்டுகொள்ளாமல் என்ன ஆணவம் என்று ஒரு பாம்பை கொன்று அந்த கொன்ற பாம்பை முனிவரின் கழுத்தில் மாலையாக போட்டுவிட்டார் மன்னர்.
சிறிது நேரம் தன் தவம் கலைந்த பிறகு முனிவர் கண் விழித்து பார்க்க அவர் கழுத்தில் இறந்த விஷம் கொண்ட பாம்பு மாலையாக இருந்ததை கண்டு சினம் கொண்டு, அவர் தன் ஞான திருஷ்டியால் இதை செய்தது யார் என அறிந்த முனிவர்,அந்த செயலை செய்த மன்னருக்கு,எந்த பாம்பை கொன்று என் கழுத்தில் மாலையாக போட்டாயே அதே விஷம் கொண்ட பாம்பினால் ஏழு நாட்களில் உனக்கு மரணம் நிகழும் என்று சாபம் இட்டார்.
அதே போல் மன்னரும் ஏழு நாட்களில் பாம்பு கடித்து இறந்து போனார். தவத்தில் இருந்த முனிவரின் நிலை அறியாமல் கர்வமும் கோபமும் கொண்ட மன்னனுக்கு கிடைத்த லாபம் மரணம்.
ஆகையால் மனிதன் வாழும் நாட்களில் அவன் மிக முக்கியமாக தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவேண்டிய ஒன்று கோபம்.கோபத்தினால் மனிதனுக்கு நிகழக்கூடிய ஒரே விஷயம் இழப்பாக தான் இருக்கும்,ஆதலால் கோபம் கொள்ளும் முன் கவனம் அவசியம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |