நம்முடைய வாழ்க்கைக்கு துணையான முருகப்பெருமான்
By Sakthi Raj
வாழ்ந்தோம் இறந்தோம் இது தான் இயற்கை நியதி.அப்படியாக மனிதர்கள் பலவிதம்.அந்த பலவித மனிதர்கள் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.அப்படியாக கலியுக வரதன் முருகன் எப்பொழுதும் தன்னுடைய பக்தர்களுக்கு துணையாக இருந்து அவர்களை வழிநடத்தி வருகின்றார்.
அதைத்தான் அருணகிரிநாதர் பாடலாக பாடி இருக்கின்றார்.
விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே.
விளக்கம்
அதாவது முருகப்பெருமானின் திருப்பாதம் பக்தர்களின் கண்ணுக்கு துணை.ஒருவரது பேச்சிற்கு அவனுடைய பெயர்களே துணை.முற்பிறவியில் செய்த தீவினையை போக்க அவனது பன்னிரண்டு தோள்களே துணை.செல்லும் பாதையில் என் வழிக்கு துணை அவனது வேலும் மயிலும் துணை.செங்கோட்டு வேலவரே எனக்கு உற்ற துணைவன் என்கிறார் அருணகிரிநாதர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |