இறைவனை எவ்வாறு தரிசனம் செய்ய வேண்டும்?
இறைவன் அவன் தான் எல்லாமுமே. அழுகை, சிரிப்பு, ஆனந்தம் இவை அனைத்தும் நாம் இறைவனை வழிபட நமக்கு கிடைக்கும் பரிசுகள்.
தவத்தில் ஆழ்ந்து சிந்தும் ஆனந்த கண்ணீர் துளிகளை தான் பக்தர்கள் தவமாக இருந்து கிடைக்க வேண்டுகின்றனர்.
அவனை நினைத்து சிந்தும் கண்ணீரில் தான் எத்தனை ஆனந்தம் நிறைந்து இருக்கிறது என்று வார்த்தைகளால் அளவிடமுடியாது.
இப்படியாக நாம் இறைவனை எவ்வாறு தரிசிக்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
ஒருமுறை, முருக பக்தர் மலை மேல் இருக்கும் முருகன் கோயிலுக்கு முருகரை தரிசிக்க உறவினர்களுடன் சென்றார். அந்த பக்தருக்கு அந்த முருகன் கோயிலுக்கு செல்வது அதுதான் முதல் முறை.
அவருடன் வந்தவர்கள்,மலை மேல் ஏற ஏற ஊரை சுற்றி இருக்கும் தென்னை மரங்களின் காட்சிகளும், ஊரின் பசுமையும் அழகையும் வர்ணித்து கொண்ட படியே ஏறினார்கள் .
இந்த பக்தரும் ஊரை ரசித்தவாரே இயற்கை எத்தனை அழகு இதை நான் இந்த நொடியில் பார்க்க தவம் செய்திருக்க வேண்டும் என்று மனதில் இறைவனுக்கு நன்றி சொன்னப்படி மலை ஏறினார்.
ஆனால், அந்த வர்ணனை அனைத்தும் முருகரை பார்க்கும் வரை தான் இருந்தது. முருகரை பார்த்த கண நொடியில் தன்னை அறியாது கண்ணீர் வழிந்தோட முருகா!! உன் இத்தனை அழகை பார்க்கத்தான் இத்தனை படி ஏறி வந்தேனோ?
இது நான் எந்த ஜென்மத்தின் செய்த புண்ணியத்தின் பலனோ ?எத்தனை அழகாய் காட்சி கொடுக்கிறாய்.என்னுடன் வந்தவர்கள் உன்னை உன் அழகை ரசிக்க தெரியாதவர்களாக இருக்கின்றனரே.
இயற்கையின் மொத்த அழகும் நீதானே முருகா!! இதை நான் எப்படி சொல்லுவேன். அவர்களுக்கு எப்படி புரிய வைப்பேன்.
என் இரு கண்களும் இமைக்காமல் உன் அழகை பார்க்க துடிக்கிறதே வேலவா , உந்தன் கருணை என்ன ?நின் செய்த அற்புதங்கள் எத்தனை ?
கந்தா உன் அழகுக்கு இந்த இயற்கையின் அழகு இணையாகுமா ?என்று முருகரை கண் குளிர பார்த்து ரசித்த வாறே நின்று வணங்கி கொண்டு இருந்தார்.
உண்மையில் நாமும் இறைவனை அப்படித்தான் ரசித்து வணக்க வேண்டும். சிலர் கருவறைக்குள் மூலவரை பார்க்க சென்றவுடன் கண்களை இறுக மூடிக்கொண்டு பிராத்தனை செய்வர். அப்படி செய்வதால் எந்த பயனும் இல்லை.
சூட தீபாரதனை காட்டினால் கூட தெரியாத அளவிற்கு கண்களை மூடி நின்று கொண்டிருக்கிறார்கள்.
இப்படி செய்வது இறைவழிபாடு ஆகாது. ஒரு நொடி கூட வீணாக்காமல் மூலவரை வைத்தகண் அகற்றாமல் பார்த்து தரிசனம் செய்யவேண்டும்.
அவன் அருளும் அழகிலும் மயங்கவேண்டும் .அவ்வாறு செய்ய நம் மனதில் அவன் குடிகொள்வான்.
இறைவன் நம் மனதில் நீங்கா இடம் பெற்றால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்துவிடும்
மேலும், நாம் மூலவர் முன் செல்லும் போது சில சமயம் திடீரென அபிஷேகத்திற்காக திரை போட்டு விடலாம். அல்லது அர்ச்சகர் மூலவரை மறைத்து விடலாம்.
இறைவனிடம் கோரிக்கை வைக்க நம்மிடம் எதுவும் இல்லை. அவனை ரசிக்க தொடங்கி வணங்க தொடங்கிவிட்டால் வாழ்க்கை வளமாகும் .
ஆதலால் கோயிலுக்கு செல்வதே அவனை ரசிக்கத்தான்.அதை மறந்து கண்களை மூடாமல் நாம் சுவாமி தரிசனம் செய்து இறைவன் அருள் வாங்கி வருவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |