பூதத்திடம் இருந்து நக்கீரரை காப்பாற்றிய முருகப்பெருமான்: நடந்தது என்ன?

By Sakthi Raj May 24, 2024 06:30 AM GMT
Report

சிவ பூஜையின்போது தவறு செய்வோரை சிறைப்பிடிப்பது கற்கி முனி என்ற பூதத்தின் வழக்கம். ஆயிரம் முனிவர்களை சிறைபிடித்து அவர்களை விழுங்குவது அந்த பூதத்தின் நோக்கம்.

ஒரு வழியாக 999 முனிவர்கள் அந்த பூதத்திடம் அகப்பட்டனர். இன்னும் ஒருவரைப் பிடித்துவிட்டால் ஆயிரம் பேரையும் ஒன்றாக விழுங்கி விடலாம் என அந்த பூதம் காத்திருந்தது.

இந்த சமயத்தில்தான் திருப்பரங்குன்றம் திருத்தலத்துக்கு வந்து சேர்ந்தார் நக்கீரர். சரவணப் பொய்கையில் நீராடிய நக்கீரர், ஒரு ஆலமரத்தடியில் அமர்ந்து சிவ பூஜை செய்யத் தொடங்கினார்.

பூதத்திடம் இருந்து நக்கீரரை காப்பாற்றிய முருகப்பெருமான்: நடந்தது என்ன? | Murugan Darisanam Temple Valipadu Tiruparagundram

அந்த ஆல மரத்தின் இலை காற்றில் உதிர்ந்தால் பறவையாகவும், நீரில் விழுந்தால் மீனாவும் மாறும் தன்மை கொண்டது. நக்கீரர் பூஜை செய்தபோது ஆலிலை ஒன்று நீரில் பாதியும் தரையில் பாதியுமாக விழுந்தது.

அந்த இலை ஒரு பாதி மீனாவும் மறு பாதி பறவையாகும் மாறி ஒன்றை ஒன்று இழுத்தது. இதைக் கண்ட நக்கீரர், தாம் செய்த சிவ பூஜையை மறந்து அந்த அதிசயத்தை வேடிக்கை பார்த்தார்.

இதுதான் சமயம் என காத்திருந்த பூதம், நக்கீரரைப் பிடித்து சிறை வைத்தது. அங்கிருந்த 999 முனிவர்களும், “நக்கீரரே ஒருவர் குறைவாக இருந்ததால் நாங்கள் தப்பிப் பிழைத்து உயிருடன் இருந்தோம்.

இப்போது ஆயிரமாவதாக நீங்கள் இந்த பூதத்திடம் அகப்பட்டுக் கொண்டீர்கள். இப்போது நமது எண்ணிக்கை ஆயிரமானதால் மொத்தமாக பூதத்துக்கு இரையாக போகிறோம்” எனக் கூறி வருந்தினர்.

உடனே நக்கீரர், முருகப்பெருமான் மீது திருமுருகாற்றுப்படை பாடினார். அதனால் அந்த பூதத்தைக் கொன்று அனைத்து முனிவர்களை காப்பாற்றினார் முருகப்பெருமான்.

பூதத்திடம் இருந்து நக்கீரரை காப்பாற்றிய முருகப்பெருமான்: நடந்தது என்ன? | Murugan Darisanam Temple Valipadu Tiruparagundram

பூதம் தன்னைத் தீண்டிய பாவம் தீர, நக்கீரர் கங்கையில் நீராட விரும்பினார்.

நக்கீரரின் விருப்பத்தை நிறைவேற்ற முருகப்பெருமான் தனது வேலால் பாறையை கீறி கங்கையை வரவழைத்தார்.

பூதம் தீண்டிய பாவம் விலக நக்கீரர் நீராடிய கங்கை தீர்த்தம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது. திருப்பரங்குன்றம் மடைப்பள்ளி மண்டபம் அருகில் சன்னியாசி கிணறு உள்ளது.

இந்தக் கிணற்று தீர்த்தமே முருகப்பெருமானுக்கு தினமும் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. ஐப்பசியில் கந்த சஷ்டி விரதம் இருக்கும் முருக பக்தர்கள் சன்னியாசி தீர்த்தம் அருந்தி விரதத்தை தொடங்குவது வழக்கம்.

ஸ்ரீ தடாகம் என்ற பெயருடன் திருப்பரங்குன்றத்தில் தெப்பக்குளம் ஒன்றும் உள்ளது. இதற்கு லட்சுமி தீர்த்தம் என்ற பெயரும் உண்டு.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US