தலையெழுத்தை நொடியில் மாற்றும் முருகப்பெருமானின் சக்தி வாய்ந்த மந்திரம்

By Sakthi Raj Jun 17, 2026 12:04 PM GMT
Report

இந்த உலகத்தில் பிறந்த உயிர்கள் எல்லோரும் அவர்களுடைய வாழ்க்கை தலை எழுத்து படியே அமைவது உண்டு என்று நம்பப்படுகிறது. அப்படி என்றால் நம்முடைய தலை எழுத்தை மாற்ற முடியாதா? மாற்ற முடியுமா? என்கின்ற சந்தேகமும் கேள்வியும் பலருக்கும் இருக்கிறது. சாதாரண மனிதர்களிடம் இந்த கேள்வியை கேட்டால் அவர்கள் தலையெழுத்தை நம்மால் எப்படி மாற்ற முடியும் என்று அவர்கள் சொல்வார்கள்.

அதே கேள்வியை தீவிர முருகன் அடியார்களிடம் கேட்டால் முருகப்பெருமானுடைய அருள் இருந்தால் நிச்சயம் எப்பேர்ப்பட்ட தலைவிதியையும் நாம் மாற்ற முடியும் என்பார்கள். அதாவது இறைவனை வழிபாடு செய்யத் தொடங்கிய நாள் முதல் நம்முடைய கர்ம வினைகள் விலகுகிறது. அதுவும் மனதார நம்மை இறைவனிடம் அர்ப்பணிக்க வேண்டும்.

தலையெழுத்தை நொடியில் மாற்றும் முருகப்பெருமானின் சக்தி வாய்ந்த மந்திரம் | Murugan Fate Changing Kandhar Alangaram Mantras

அந்த அர்ப்பணிக்கின்ற நேரத்தில் நாம் என்ற அகங்காரம் நம்மை விட்டு விலகுகிறது. முதலில் ஒரு மனிதனுடைய அகங்காரம் விலகிய நாள் முதல் அவன் அவனுடைய கர்ம வினைகளை மெதுவாக இழக்க தொடங்குகிறார்.

அந்த வகையில், நம்முடைய தலையெழுத்தையே மாற்றக்கூடிய சக்தி கொண்டதாக முருகன் அடியார்கள் பலரால் போற்றப்படும் அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரத்தில் வரும் ஒரு பாடலை தினமும் நாம் பாராயணம் செய்து வந்தால் எப்பேர்ப்பட்ட தலைவிதியும் மாறும் .

கந்தர் அலங்காரம் பாடல்:

"சேல்பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேங்கடம்பின்
மால்பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன்
வேல்பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்
கால்பட்டு அழிந்தது இங்கு என்தலைமேல் அயன் கையெழுத்தே."

தலையெழுத்தை நொடியில் மாற்றும் முருகப்பெருமானின் சக்தி வாய்ந்த மந்திரம் | Murugan Fate Changing Kandhar Alangaram Mantras

இந்த கந்தர் அலங்காரத்தை ஒருவர் மனதார முருகப்பெருமானிடம் சரண் அடைந்து பாராயணம் செய்து வருகின்ற பொழுது அவர்கள் வாழ்க்கையில் நடக்கின்ற துயரமும் அவர்களுடைய தீராத வறுமையும் தடைகளும் விலகி தலையெழுத்தே மாற்றக்கூடிய வல்லமை பெற்றது. இதை நீங்கள் தினமும் பூஜை அறையில் முருகப் பெருமான் திருவுருவப்படத்திற்கு முன்பு விளக்கேற்றி பாராயணம் செய்து வரலாம்.  

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US