அளவு கடந்த துயரம் வரும் பொழுது நாம் செய்யவேண்டியவை
வாழ்க்கையில் இன்பம் துன்பம் என மாறி மாறி வரும்.அந்த துன்பம் தலைக்கு மேல் போகும் போது செய்வதறியாது நிற்கும்பொழுது நாம் பற்ற வேண்டிய கால்கள் முருகப்பெருமான்.
மேலும் அந்த துன்பத்தால் பயம் நம்மை சூழும் பொழுது" காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியினில் நோக்க தாக்க தாக்க தடையற தாக்க்க பார்க்க பார்க்க பாவம் பொடி பட "என்று மனதில் சொல்லி வழிபட பயம் குறையும்.
முருகப்பெருமான் நம் அருகில் வருவார்.இந்த கலியுகத்தில் நம்மை காக்கும் வேலவன் ஆன முருகப்பெருமான் பக்தர்களிடம் நின்று பேசுவார்.
பக்தர்கள் துயர் தீர்ப்பார். வேலவா காந்த என்று முருகனின் பக்தர்களை எவன் ஒருவன் அழ வைக்கிறார்களோ.அவர்களை முருகன் கண்டிப்பாக தண்டிப்பார்.
மேலும் கந்த சஷ்டி கவசம் என்பது நம்மை காக்கும் கவசம்,எவர் ஒருவர் தினம் அதை முருகன் முன் நின்று பாடுகிறார்களோ அவர்கள் மன குறையை தீர்த்து வைப்பார் முருகர்.கந்த சஷ்டி கவசம் தொடர்ந்து படித்து வர வாழ்க்கையில் என்ன பிரச்னைகள் வந்தாலும் பார்த்து கொள்ளலாம் என்ற தைரியம் பிறக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |