வாழ்க்கை பயத்தை போக்கும் முருகப்பெருமான்
வாழ்க்கையில் எது நடந்தாலும் அதை கடக்க கூடிய சக்தி நம்மிடம் உள்ளது.ஆனால் அதை கடக்க விடாமல் நம்மை சிறை செய்து வைப்பது நம்முடைய பயம்.அந்த பயம் தான் மனிதனின் முதல் எதிரி.இந்த பயம் ஆனது எப்பேர்ப்பட்ட பலசாலியையும் வீழ்த்திவிடும்.ஆனால் அந்த பயத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வது எப்படி?
உண்மையில் பயம் என்பது ஒரு வகை மிருகம் என்றே சொல்லலாம்.அதனிடம் இருந்து முடிந்த வரையில் வெகு விரைவாக நாம் நம்மை தற்காத்து கொள்ள வேண்டும்.அப்படியாக அந்த தற்காப்பு எப்படி கற்று கொள்வது?மிகவும் எளிமையான விஷயம் தான்.
புரிதல் வேண்டும்.தன்னை அறிதல் வேண்டும்.இதில் தான் வாழ்க்கை தொடங்குகிறது.இந்த தன்னை அறிதலில் தான் ஆன்மீகமும் நிறைந்து இருக்கிறது.
எவன் ஒருவன் தன்னை உணராமல் ஆன்மீகத்தில் உள்ளே வரவேண்டும் என்று நினைக்கிறானோ அவனுக்கு ஆன்மீகமும் ஒரு சரியான வழிகாட்டியாக இருக்க முடியாது.இந்த தன்னை அறிதல் என்றால் என்ன என்று பார்த்தால்,ஒன்றும் இல்லை உணர்தல்.
உணர்தல் என்பது பூமியில் இருக்கும் உயிரினங்கள் எல்லாம் ஒரு நாள் மறைந்து போகக்கூடியவை.எதுவும் நிரந்தரம் இல்லை.ஆக கற்றலே வாழ்க்கை இதில் தைரியம் தன்மைபிக்கை பயம் இவை எல்லாம் தாண்டி சமநிலையான எண்ணம் இவை தான் நம்மை முன்னோக்கி செல்ல உதவும் சிறந்த கருவி என்று உணர்தல் ஆகும்.
எல்லாவற்றையும் சொல்லுவது எளிது என்றாலும் நடைமுறை செயல் படுத்த பல காலங்கள் ஆகும்.அதற்க்குள் அந்த பயம் நம்மை பாதி விழுங்கிவிடும்.ஆக அந்த நேரத்தில் நாம் பதட்டம் அடையாமல் இறைவனை சரண் அடையவேண்டும்.கலியுக கடவுளாக போற்றப்படும் கந்தனை நம்பினோர் கைவிடப்படார்.
அதாவது முருகனை நம்பி அவனின் நாமத்தை துதிப்பவர்களுக்கு எந்த தீமையும் அண்டாது.மேலும் முருகனின் பாடல்களை நாம் பாடி வர மனதில் ஒரு தனி உத்வேகம் பிறப்பதை பார்க்கமுடியும்.நம்முடைய வழிகாட்டியாக இறை அருள் முன் வந்து நிற்கும்.எதையும் தாங்கும் சக்தி தானாக நமக்கு பிறக்கும்.
அப்படியாக பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய கமல பந்தம் படித்து வர வாழ்க்கையில் மன நிம்மதி பிறக்கும்.மனம் தேவை இல்லாமல் பதட்டம் கொள்வதில் இருந்து விடுபட்டு நிதான நிலையை அடையும்,மேலும் வாழ்க்கையை வாழ புது நம்பிக்கை பிறக்கும்.
இந்த பாடலை தினமும் கேட்டாலோ இல்லை படித்தாலோ நல்ல மாற்றம் நடக்கும்.
கமல பந்தம்
வரவிதி திருவ வருதி பொனரவ
வரனது கருவ வருகணை குரவ
வரகுக மருவ வருமறை பரவ
வரபத மருவ வருமதி விரவ.
வாழ்க்கை என்பது மிகவும் சிறியது.அதை வாழ கடினமாக இருந்தாலும் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள எல்லாம் அழகாய் மாறும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |