முருகன் அருளை பெற பாட வேண்டிய பாடல்
கார்த்திகை மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதம் இந்த மாதம் அனைத்து கடவுள்களுக்கும் சிறப்பு வாய்ந்த மாதம் என்றாலும் முருகப்பெருமானுக்கு கூடுதல் சிறப்புகள் கொண்ட மாதம்.அப்படியாக முருகப்பெருமானுக்கு உரிய சஷ்டி திதி வெள்ளிக்கிழமையில் வருவது கூடுதல் சிறப்பு வாய்ந்தது.
அந்த நாளில் முருகனின் பரிபூர்ண அருளை பெற நாம் முருக மந்திரம் பற்றி பார்ப்போம். பொதுவாக சஷ்டி திதி என்பது கூடுதல் விஷேசம் கொண்டவை.அதிலும் கார்த்திகை மாதத்தில் வரும் சஷ்டி திதி இன்னும் கூடுதல் விஷேசம் நிறைந்தவையாக உள்ளது.
பிற நாட்களில் முருகப்பெருமானை வழிபாடு செய்யாவிட்டாலும் வளர்பிறை சஷ்டி அன்று முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறது.முருகன் கோயில் அனைத்தும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
அதில் முருகனின் அறுபடை வீடுகளை சென்று தரிசிக்க வாழ்க்கையில் பல மாற்றங்களை நாம் பார்க்க முடியும்.முடியாதவர்கள் அருகில் இருக்கும் முருகன் கோயிலுக்கு சென்று வரலாம்.
கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை சஷ்டி அன்று மாலை வீட்டில் இருக்கக் கூடிய முருகப்பெருமானின் படத்தை சுத்தம் செய்து அவருக்கு முன்பாக ஒரு அகல் விளக்கை வைத்து அதில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு வடக்கு பார்த்தவாறு தீபம் ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு முருகப்பெருமானின் இந்த பாடலை ஒரே ஒரு முறையாவது கூற வேண்டும். தங்களால் இயலும் பட்சத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் கூறலாம். இயன்றவர்கள் அருகில் இருக்கக்கூடிய முருக ஆலயத்திற்கு சென்று அங்கு தீபம் ஏற்றி வைத்து இந்த பாடலை பாடலாம்.
பாடல்
மூவிரு முகங்கள் போற்றி!
முகம் பொழி கருணை போற்றி!
ஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள் போற்றி!
காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலர்அடி போற்றி!
அன்னான் சேவலும் மயிலும் போற்றி!
திருக்கைவேல் போற்றி! போற்றி
முழுமனதோடு இந்த பாடலை பட நிச்சயம் உங்கள் உண்டான தடைகள் விலகி நீங்கள் முருகன் அருளால் முன்னேற்றம் அடைவதை காண முடியும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |