இரட்டிப்பு பலன் கிடைக்க வீட்டில் முருகன் படம் வைக்க வேண்டிய இடம்
கலியுக வரதன் முருக பெருமான் கோடான கோடி மக்கள் மனதில் குடிகொண்டு இருப்பவர்.அப்படியாக முருக பெருமான் பல கோலங்களில் மக்களுக்கு காட்சி கொடுக்கிறார்.ஒவ்வொரு தரிசனமும் ஒவ்வொரு பலன் அளிக்கிறது.அதே போல் நம்முடைய வீட்டில் முருகன் படம் வைத்து வழிபாடு செய்வதுண்டு.
வீட்டில் செல்வம் பெருகி வெற்றிகள் குவிய முருகப்பெருமான் எந்த திருக்கோலம் படத்தை வீட்டில் எந்த திசையில் வைக்கவேண்டும்?அதனால் உண்டாகும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.
தொழில் வளர்ச்சி உண்டாக ராஜ அலங்காரத்துடன் இருக்கும் பழனி தண்டாயுதபாணி கருதப்படுகிறார்.அப்படியாக வீட்டில் நஷ்டம் ஏற்படாமல் செல்வம் பெறுக ராஜ அலங்காரத்தில் உள்ள முருகப்பெருமான் படத்தை வீட்டின் மேற்கு திசையில் வைக்க வேண்டும்.
அதாவது முருகப் பெருமான் கிழக்கு நோக்கி இருக்கும் படியும், நம்முடைய தலைக்கு மேல் முருகனின் உருவம் இருக்கும் படியும் வைக்க வேண்டும்.இவ்வாறு வைத்து வழிபாடு செய்யும் பொழுது முருகனின் அருளால் நம் வீட்டில் உண்டான பண நஷ்டம் விலகும்.
குடும்பங்களில் நல்ல மாற்றம் உண்டாகும்.மேலும் முருகன் படத்திற்கு ராகு காலத்தில் செவ்வரளி மாலை சாற்றி வழிபட்டு வந்தால் வீட்டில் தடை பட்ட காரியங்கள் நடந்தேறும்.வீட்டில் எதிர்மறை சக்திகள் இருந்தால் அதை விலகி விடும்.
மேலும் வெள்ளிக்கிழமை ராஜா அலங்கார முருகனுக்கு பன்னீர் ரோஜாப்பூ வாங்கி அணிவித்து வந்தால் வற்றாத செல்வம் சேரும்.ஞாயிற்றுக்கிழமைகளில் மல்லிகைப்பூ வாங்கி சாற்றி வழிபட்டு வந்தால் உயர் பதவிகள்,மற்றும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
அதே போல் திங்கட்கிழமையில் சம்பங்கி மாலை, மல்லிகை மாலை சாற்றி வழிபட்டால் குடும்ப உறுப்பினரின் உடல் நலம் சீராகும்.புதன்கிழமை மரிக்கொழுந்து மாலையும், வியாழக்கிழமையில் சந்தன மாலையும் முருகப் பெருமானுக்கு அணிவிப்பது சிறப்பு.
இதோடு சேர்த்து எப்பொழுதும் முருகப்பெருமானுக்கு வெற்றிவேர் மாலையை அணிவிப்பது சிறந்த பலனை தரும்.இந்த வெற்றி வேர் மாலையை 6 மாதத்திற்கு மட்டும் பயன் படுத்த வேண்டும்.மேலும் இந்த மாலையை மாதத்திற்கு ஒருமுறையாவது பன்னீரில் கழுவி சாற்றி வருவது நல்லது.
மிகமுக்கியமாக வாசம் குறைந்த வெற்றி வேர் மாலையை பயன் படுத்த கூடாது.ஆனால் மனம் போன வெற்றிவேரை பொடி செய்து சாம்பிராணி தூபம் போடுவதற்கு பயன் படுத்தலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |