முருகனின் வேலை இப்படி தான் வேண்ட வேண்டும்
வேல் என்பது தமிழரின் முதன்மையான கடவுளான முருகனின் கைகளில் காணப்படும் தெய்வீக ஆயுதமாகும்.
பண்டைத் தமிழர்கள் போரில் பயன்படுத்திய ஆயுதமான ஈட்டியும் கிட்டத்தட்ட வேல் போன்றதாகும்.
இந்து சமயப் புராணங்களின் படி பார்வதி தேவி, தனது சக்தி முழுவதையும் ஒரு வேலுக்குள் அடக்கி, அதனைத் தன் மகனான முருகனுக்கு அசுரன் சூரபதுமனை அழிப்பதற்காக வழங்கியதாகச் சொல்லப்படுகிறது.
கந்த புராணத்தில் முருகனுக்கும் சூரபதுமனுக்கிடையே நடந்த போரில், இந்த வேலைப் பயன்படுத்தி முருகன் சூரபதுமனைக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
மாமரமாக மாறி சூரபதுமனை புரிந்து கொண்ட முருகன் தனது வேலை எறிந்து மாமரத்தை இரண்டாகப் பிளக்க, அதில் ஒரு பாதி சேவலாகவும் மறுபாதி மயிலாகவும் மாறிவிடுகிறது.
அந்தவகையில், வேலுண்டு வினையில்லை எனக்கூறப்படும் முருகனின் வேலை எப்படி வணங்கவேண்டும் என்று மூலிகை சித்தர் பகிர்ந்துள்ளார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |