வாழ்க்கையில் வெற்றி பெற முருகனை எவ்வாறு வழிபாடு செய்யவேண்டும்

By Sakthi Raj Aug 13, 2024 10:00 AM GMT
Report

முருகன் அவன் உண்மையில் கலியுக வரதன் தான்.நோய் குணமாக மருந்து வேண்டும் என்றால் வாழ்க்கையில் உள்ள இன்னல்கள் பாவங்கள் பிறவி பலன் அடைய முருகனின் அருள் தேவை.

அப்படியாக பலரும் முருகனை அவர்களுக்கு தெரிந்த பக்தியில் வழிபாடு செய்வார்கள்,இப்பொழுது நாம் முருகனை எந்த முறையில் வழிபாடு செய்தால் வாழ்க்கையில் வெற்றி அடையமுடியும்,முருகனின் பரிபூர்ண அருளை பெற முடியும் என்று பார்ப்போம்.

வாழ்க்கையில் வெற்றி பெற முருகனை எவ்வாறு வழிபாடு செய்யவேண்டும் | Muruganin Perumai Valipadum Murai

1. முருகனின் ஆறுபடை வீடுகள் அனைத்துமே விஷசம் நிறைந்தவை.அதிலும் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் எல்லோர் மனதிற்கும் நெருக்கம் ஆனவர்.அதாவது வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்தும் வகையில் முருகனின் பழனி கோயில் அமைந்து இருக்கும்.வாழ்க்கையில் எந்த ஒரு தீர்க்க முடியாத பிரச்சனை என்றாலும் பழனி ஆண்டவரை தரிசியுங்கள்.அங்கு பால் அபிஷேகம் செய்யுங்கள்.

2. முருகனின் ம் மிகவும் சக்தி வாய்ந்த திருப்புகழ் பாடல்களை தினமும் பாடுங்கள். சுப்பிரமண்ய பஜனை செய்யுங்கள்.

3. முருகனுக்கு ஏற்ற தினமான செவ்வாய், வியாழன் கிழமைகளில் விரதம் இருங்கள். அன்று முருகனுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.

4. "ஓம் சரவணபவ" மந்திரத்தை தினமும் 108 முறை பாராயணம் செய்யுங்கள்.

5. முருகனின் வடிவமான வேல் போன்ற முருகனின் சின்னங்களை வீட்டில் வைத்து வணங்குங்கள்.

வீட்டில் உள்ள கண் திருஷ்டி நீங்க இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்

வீட்டில் உள்ள கண் திருஷ்டி நீங்க இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்


6. கந்த சஷ்டி கவசம் போல் நம்மை காக்கும் கவசம் எதுவும் இல்லை.கந்த சஷ்டி கவசத்தை தினமும் பாராயணம் செய்யுங்கள்.

7. தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற முருகன் விழாக்களில் கலந்து கொள்ளுங்கள்.

8. முருகனுக்கு உகந்த மஞ்சள், சிவப்பு ஆடைகளை அணியுங்கள்.

9. முடிந்த அளவிற்கு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் செய்யுங்கள். ஏழைகளுக்கு உதவுங்கள்.

10. மனதில் உள்ள வழிகள் வாழ்க்கையின் குறிக்கோளை முருகனிடம் சொல்லுங்கள். அவர் உங்களுக்கு வழிகாட்டுவார்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US